Categories: Cinema News latest news

படம் இயக்கியே தீருவேன்னு அடம்பிடிக்கும் சூரி.. கதை பயங்கரமா இருக்கே!..

நடிகர் சூரி: தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரி. அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுக்க தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி ஹீரோவாக வளர்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி கதாபாத்திரங்களுடன் நடித்து இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கின்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். தற்போது விடுதலை 2 திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கின்றார். விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்திருக்கின்றது. தற்போது விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர், நடிகர் கென், நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தனியார் youtube நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்த சூரி தான் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறியிருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘முத்துச்சாமி,வேங்கை அரசி இவர்கள் இருவரை வைத்து ஒரு கதை வைத்திருக்கின்றேன். அந்த கதை என்னைக்காவது ஒரு நாள், ஏதாவது ஒரு நேரத்தில் அந்த கதையை இயக்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகின்றேன். கட்டாயம் இந்த திரைப்படத்தை இயக்காமல் நான் விடமாட்டேன்.

நான் சொல்லும் போது அது சாதாரணமாக தெரியும். ஆனால் அதிகமான விஷயங்களை இந்த படத்தில் நான் கூற இருக்கின்றேன். என் வாழ்க்கையில் என் அப்பா தான் ஹீரோ. இப்போ அவர் இறந்துவிட்டார். இருப்பினும் என்னுடன் தான் இருக்கின்றார். பல விஷயங்களை என் வாழ்க்கையில் கற்றுக் கொடுத்து சென்றுவிட்டார்.

வாழ்க்கையில் பொறுமையாக இருந்து சினிமாவில் முன்னுக்கு வந்ததற்கு அவர்தான் முக்கிய காரணம். என்னை அடிக்கடி சிங்கக்குட்டி என்று கூறுவார். நான் வாழ்க்கையில் சாதிப்பேன் என்பதை என்னை விட அவர் தான் அதிகமாக நம்பியிருந்தார்’ என்று தனது தாய் தந்தையர் குறித்து மிக நெகிழ்ச்சியாக அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார். மேலும் அவர்களின் வாழ்க்கையை ஒரு கதையாக திரைப்படமாக இயக்க வேண்டும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கின்றார் நடிகர் சூரி.

Published by
ramya suresh