சாய் பல்லவி டூ ராஷ்மிகா வரை… தென்னிந்திய நடிகைகளின் சீ.. சீ.. கெட்ட பழக்கம்…
Actress: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளிடம் இருக்கு கெட்ட பழக்கங்கள் குறித்த சுவாரஸ்ய தொகுப்பு.
ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அறியப்படுகிறார். தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது பாலிவுட்டில் ஹிட் அடித்து வரும் ராஷ்மிகா எப்போதுமே நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பாராம்.
தமிழ் பெண்ணாக இருந்தாலும் தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கும் சமந்தாவிற்கு என்ன பிரச்னை வந்தாலும் ஜிம்மையே விடமாட்டாராம். தற்போது தென்னிந்திய சினிமாவின் லக்கி கேர்ள் என அறியப்படுபவர் சாய் பல்லவி.
அவர் படத்தில் இருந்தாலே படம் சூப்பர்ஹிட் என்ற நிலை வந்துவிட்டது. சாய் பல்லவி சீன் சரியாக வரவேண்டும் என நிறைய டேக்குகள் எடுப்பாராம். இது டைரக்டர்களை பல நேரங்களில் கோபப்படுத்தி இருக்கிறதாம்.
முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால் தற்போது மம்மியாக புரோமோட் ஆகி நடிப்பில் இருந்து விலகிவிட்டார். இருந்தும் அவருக்கு 5 நிமிடத்திற்கு ஒரு முறை கை கழுவும் பழக்கம் இருக்கிறதாம். எப்போதும் கழுவிக்கொண்டோ சானிட்டைஸ் செஞ்சிக்கொண்டே இருப்பாராம்.
ஸ்ருதிஹாசன் தற்போது கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறாராம். இவருக்கு எங்கு சென்றாலும் செருப்பு வாங்குவது தான் பழக்கமாம். அப்படி இவரிடம் 150க்கும் அதிகமான செருப்புகள் இருக்கிறதாம். ஆனால் தொடர்ந்து வாங்கி கொண்டே இருப்பதை விடமுடியவில்லையாம்.
ஹன்சிகா மோத்வானி பப்லி நடிகையாக இருந்தாலும் அவரால் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது குடும்ப வாழ்க்கையில் இணைந்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு அவர் போன் தான் கெட்ட பழக்கமாம். ப்ரீ டைமில் கையில் இருந்து போனை பிரிக்கவே முடியாதாம்.
20களில் சினிமாவிற்குள் வந்த நடிகை திரிஷா மீண்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் எடுத்திருக்கும் நிலையில் அவருக்கு ஸ்விம்மிங் தான் கெட்ட பழக்கமாக மாறி இருக்காம். என்ன செய்தாலும் தினமும் ஸ்விமிங் பூல்லில் இறங்காமல் அவரால் இருக்கவே முடியாதாம்.