மசாலா படத்தில் கமல்.. நல்ல கதையில் ரஜினி.. ஒரே நாளில் வெளியான 2 படங்கள்…

Published on: November 7, 2024
---Advertisement---

Rajini and kamal: சினிமாவில் ஜெயிக்கும் ஃபார்முலா என்றால் அது கமர்ஷியல் மசாலா படம்தான். காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி, கவர்ச்சி பாடல் என எல்லாம் அதில் இருக்கும். எனவே, பெரும்பாலான ஹீரோக்கள் அப்படிப்பட்ட கதைகளில் நடிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். எம்.ஜி.ஆர் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

துவக்கத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் கொண்ட படங்களில் நடித்து சிவாஜியும் கூட ஒருகட்டத்தில் அவர் நடிக்கும் படங்களில் சண்டை போட துவங்கினார். எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு பின்னர் வந்த ரஜினி உள்ளிட்ட எல்லா நடிகர்களுமே அந்த ரூட்டில்தான் போனார்கள். இதில், கமல் மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.

ஏனெனில், கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர். 100வது படமாக கமர்ஷியல் பக்கம் போகாமல் ராஜபார்வை எடுத்தவர். கமலுக்கு நேர் எதிர் ரஜினி. அவர் நடிப்பில் வெளியான 95 சதவீத படங்கள் கமர்ஷியல் படங்கள்தான். ஆனால், அதே ரஜினி 80களில் முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில கலைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரி படங்களில்தான் ரஜினி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். இப்போதும், அதுபோன்ற கதைகளில் நடித்த ரஜினியைத்தான் எங்களுக்கு பிடிக்கும் என பலரும் சொல்வதுண்டு. 80களில் ரஜினி – கமலை வைத்து அதிக படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கி இருக்கிறார். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான இயக்குனராக இருந்தார். ரஜினிக்கு ஜனகரஞ்சகமான கதைகளை எழுதி ரஜினியை ஒரு ஸ்டார் ஆக்கியவர் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். அந்த கதைகளை இயக்கியது எஸ்.பி.முத்துராமன்தான்.

கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த ரஜினியை வைத்து எங்கேயோ கேட்ட குரல் படத்தையும், கமலை வைத்து சகலகலா வல்லவன் என்கிற படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் 1982ம் வருடம் ஆகஸ்டு மாதம் 14ம் தேதி ஒன்றாகவே வெளியானது. இதில், சகலகலா வல்லவன் அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment