Cinema News
புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்ச ஸ்ரீலீலா!.. படிச்ச படிப்பு எதுக்கெல்லாம் யூஸ் ஆகுதுன்னு பாருங்க!
குண்டூர்காரன் என்ற படத்தில் அமைந்த ஒரு குத்துப் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா.தெலுங்கில் மட்டுமே இவருடைய பெயர் உச்சரிக்கப்பட்டு வந்தது .இந்த பாடலுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவே இவர் பக்கம் திரும்பி இருக்கிறது. பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழிலும் எண்டிரி கொடுத்துள்ளார் ஸ்ரீ லீலா.
தமிழ் அல்லாமல் மற்ற மொழி நடிகைகளில் நடனத்தில் மிகவும் கைதேர்ந்தவராக இருந்தவர் சாய் பல்லவி. அவருக்கு அடுத்தபடியாக நடனத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்த ஒரு நடிகையாக ஸ்ரீ லீலா பார்க்கப்பட்டார். அந்த பாடலுக்குப் பிறகு தமிழில் எப்போது நடிக்க வருவீர்கள் என ஸ்ரீலீலாவை பார்த்து தமிழ் ரசிகர்கள் உட்பட அனைவருமே கமெண்ட்கள் மூலம் கேள்விகளைக் கேட்டு வந்தனர்.
அதன் பிறகு தான் பராசக்தி படத்தின் மூலம் தமிழில் எண்டிரி கொடுக்கிறார் ஸ்ரீ லீலா. இப்போது பாலிவுட்டிலும் அவர் நடித்து வருகிறார். கார்த்திக் ஆரியன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீலீலாவின் காதல் கிசுகிசு ஒன்று சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அவர் அங்கு ஒரு நடிகரை காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது வேறு யாருமில்லை பாலிவுட்டில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திக் ஆரியன் தான். அவரை தான் இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கார்த்திக் ஆரியன் ஏகப்பட்ட பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் ஒரு விழாவில் கூட கார்த்திக் ஆரியன் தாய் மாலா தனக்கு மருமகளாக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

ஒரு குடும்பத்தின் தேவை என்னவெனில் வரப்போகும் மருமகள் ஒரு டாக்டராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் கார்த்திக் ஆரியன் ஸ்ரீ லீலா உறவை குறித்த அந்த தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஸ்ரீலீலா எம்பிபிஎஸ் படித்தவர். இதை வைத்துதான் கார்த்திக் ஆரியனின் தாய் அந்த மாதிரி கூறி இருக்கிறார் என தெரிகிறது. அது மட்டுமல்ல கார்த்திக் ஆரியன் குடும்பத்தில் நடந்த ஒரு விழாவில் கூட ஸ்ரீ லீலா கலந்து கொண்ட வீடியோ வைரலானது. இது மேலும் அவர்கள் உறவை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.