பிரபுதேவா நிகழ்ச்சியில் சுருஷ்டி டாங்கே விலகியதன் பின்னணி..
நடனப்புயல்: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பலராலும் அறியப்படுபவர் நடிகர் பிரபுதேவா. நடன புயல், சூறாவளி என பல்வேறு பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார் .ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து ஹீரோவாக மாறி அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராக பல்வேறு திரைப்படங்களுக்கு இவர் பணியாற்றி இருக்கிறார். அதுபோக இயக்குனராகவும் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
தமிழில் விஜயை வைத்து போக்கிரி என்ற படத்தை இயக்கி திறமையான இயக்குனர் என்ற பெயரை வாங்கினார் பிரபுதேவா. போக்கிரி திரைப்படம் பெரிய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஹிட்டான திரைப்படம். அந்த படத்திற்கு என தனி கிரேஸ் இன்று வரை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது .அதுவும் போக்கிரி படத்தில் வித்தியாசமான மேனரிசத்தை விஜய் இதில் காட்டியிருப்பார்.
பன்முகத்திறமை கொண்டவர்: ஹிந்தியிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் பிரபுதேவா. அதே போல பல ஹிந்தி முன்னணி நடிகர்களுக்கு நடனமும் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இப்படி இந்திய அளவில் பிரபலமான ஒரு நடன கலைஞராக இருக்கும் பிரபுதேவா முதன் முறையாக நடன நிகழ்ச்சி ஒன்றை சமீபத்தில் நடத்தினார். இது இந்தியாவில் முதன்முறையாக நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சி ஆகும். அதுவும் நேரலையாக நடைபெற்றது .
பிரம்மாண்ட செட்: கடந்த 22ஆம் தேதி சென்னையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை எடுத்து நடத்தியவர் நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார். அவர்தான் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்கினார். ஆர்ட் டைரக்டர் கிரண் பல்வேறு செட்டுகள் அமைத்து இன்னும் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஆக்கினார். மிகப் பிரபலமான நிறுவனமான அருண் இவன்ட்ஸ் அருண் என்பவர் நடத்த பல முக்கிய பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
சிருஷ்டி டாங்கே விலகல்: இவர்களுடன் திரை பிரபலங்கள் பல பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த விழாவை மேலும் சிறப்பாக்கினார்கள். அதில் நடிகை ரோஜா, மீனா, சங்கீதா ,அபிராமி என பல நடிகைகள் பிரபுதேவாவுடன் இணைந்து ஆடி ஷோவையே கலகலப்பாக்கினர். இந்த நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அதில் தனக்கு மரியாதை இல்லை. அதனால் மரியாதை இல்லாத இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது என அதில் தெரிவித்து இருந்தார் .இந்த நிலையில் சிருஷ்டி டாங்கே விலகியதற்கான காரணம் என்ன என்பதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். பிரபுதேவா நடன நிகழ்ச்சி என்றாலே ரிகர்சலிலேயே அவர் காலை உடைத்து விடுவார், அந்த அளவுக்கு பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்க்கக்கூடிய ஒரு நபர் பிரபுதேவா. ஒரு வேளை அவருடைய நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கூட சிருஷ்டி தாங்கி இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி இருக்கலாம் என அந்தணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.