தனக்கு தானே சூனியம் வச்சிக்கலாம்… ஸ்ருதிஹாசனின் திடீர் உருட்டு… அடங்க மாட்டீங்களே?

by ராம் சுதன் |

Sruthi Hassan: நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய சினிமா கேரியரில் உச்சத்தில் இருக்கும் போது கூட திடீரென எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் கமல்ஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன். பாடகியாக அறிமுகமானாலும் தொடர்ந்து அவருக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் தன்னுடைய இருப்பிடத்தையுமே தமிழ்நாட்டில் இருந்து மும்பை பக்கம் மாற்றி கொண்டார். அப்போது தான் அவருடைய காதல் வாழ்க்கையும் பிறந்தது.

முதலில் நடிகர் ஒருவரையும் பின்னர் டூடுல் ஆர்டிஸ்ட் ஒருவரையும் காதலித்த ஸ்ருதிஹாசன் அவர்களுடன் காதல் முறிவு நடந்தது. தற்போது சிங்கிளாக இருக்கும் ஸ்ருதிஹாசன் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். தற்போது தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் சலார் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு தன்னுடய முகத்தில் அறுவை சிகிச்சை செய்வது பிடித்தமான விஷயமாம். அந்த வகையில் சமீபத்தில் ஸ்ருதி காஸ்மெட்டிக் சர்ஜரி செய்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அப்போது பேசிய ஸ்ருதிஹாசன், ஆமாம் நான் செய்திருக்கேன். வருங்காலத்தில் என் முகத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்றாலும் நான் தைரியமாக அதை செய்து கொள்வேன். இது என்னுடைய உடல். இதில் நான் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்வது என்னுடைய விருப்பம்.

இதை நான் என்கரேஜ் செய்வதும் இல்லை. விமர்சிப்பதும் இல்லை. அவர் அவரவருக்கு எது சரியாக இருக்கிறதோ அதை செய்யலாம். எல்லாரும் வேலையில் கவனம் செலுத்துங்கள். என்னையும் ஹீரோயின் முகமே இல்லை என பலரும் விமர்சிப்பது உண்டு. அதை நான் கண்டுக்கவே மாட்டேன் என்றார்.

Next Story