கமல்ஹாசன் மகளை அதுக்குள்ள கழட்டி விட்டீங்களா? கூலி படத்தின் பரபர அப்டேட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:53  )

Coolie: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் குறித்த சுவாரசிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படமாக உருவாகி வருகிறது கூலி. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மலையாள நடிகர் செளபின் ஷாகீர், புரட்சித்தமிழன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. லோகேஷின் மற்ற படங்களில் இருந்து கூலி வித்தியாசமான படமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தில் போதை பொருள், கடத்தல் உள்ளிட்ட காட்சிகள் மையப் படுத்தப்படாது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு பதிலாக தங்க கடத்தலை மையமாக வைத்து படம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கும் என்பதை சமீபத்தில் லீக்கான நாகர்ஜுனாவின் காட்சி உறுதி செய்து இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு கூலி திரைப்படம் தான் காரணம் என சிலர் கிசுகிசுத்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஆப்பரேஷன் தான். எதிர்ச்சியாக நடந்தது அல்ல என்பதை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினார்.. ரஜினி இந்த மாத கடைசியில் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் படத்தின் இருக்கும் மற்ற முக்கிய பிரபலங்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் கூலி திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்து விட்டார் என ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெகு சில நாட்களில் ஸ்ருதியின் கேரக்டர் முடிந்து விட்டதால் அவருக்கு சின்ன ரோல் தான் கொடுக்கப்பட்டு இருக்கும் எனவும் பேச்சுகள் அடிப்படை தொடங்கி இருக்கிறது.

Next Story