விக்ஸ் ஹால்ஸ் எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!.. ஓவர் பில்டப் கொடுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்..!

Actor Ajith: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆரம்ப காலகட்டத்தில் கார் மற்றும் பைக் ரேசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜித் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கியதற்கு பிறகு ரேசில் பங்கு கொள்வதை தவிர்த்து வந்தார்.
தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி கார் ரேசிங்கில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் இந்த வருடம் பெரும்பாலும் அவர் கார் ரேஸில் தான் பங்கு கொள்ள இருப்பதாக கூறி இருக்கின்றார். நடிகர் அஜித் இந்த வருடம் எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று கூறினாலும், ஏற்கனவே இரண்டு திரைப்படங்களை நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்றிருந்தார்.
விடாமுயற்சி: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடித்திருந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக இயக்கி வந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதலே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வழக்கமான அஜித்தை இந்த திரைப்படத்தில் காண முடியவில்லை. மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை என்று தொடர்ந்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் படத்திற்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் காரணமாக படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
குட் பேட் அக்லி திரைப்படம்: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது.
அஜித் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். பில்லா திரைப்படத்திற்கு பிறகு ஒரு மாசான அஜித்தை இந்த திரைப்படத்தில் பார்க்க முடியும் என்று கூறி வருகிறார்கள். மேலும் சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் கூறுவது மாஸான அஜித்தை இந்த படத்தில் எங்களால் பார்க்க முடியவில்லை. இது அஜித் ரசிகர்களான எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கின்றது என்று கூறி வந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அனல் பறக்கும் என தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது.
சுப்ரீம் சுந்தர் மாஸ்டர்: குட் பேட் அக்லி திரைப்படத்தில் பைட் மாஸ்டராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த பலரும் அஜித்தின் மாஸ் காட்சிகளை மிஸ் செய்ததாக கூறி வந்தார்கள்.
அதற்கெல்லாம் சேர்த்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் 10 மடங்கு மாஸ் காட்சிகள் இருக்கும். ரசிகர்கள் விக்ஸ், ஹால்ஸ் போன்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கத்தி கத்தி தொண்டையே வலித்து விடும்' என்று கூறியிருக்கின்றார்/ இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகின்றது.