Categories: latest news

‘தக் லைஃப்’ ஸ்கிரிப்ட் எப்படி வந்துச்சு? கொக்கைன் சாப்பிட்டுதான்.. பகீர் கிளப்பிய சுசித்ரா

போதைப் பொருள் விஷயத்தில் தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா மீதும் போதை பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா இது சம்பந்தமான சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். ஸ்ரீகாந்தை பர்சனலாக எனக்கு தெரியாது என்றாலும் அவர் போதைப் பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டேன். நான் இதை கண்ணால் பார்க்கவில்லை. அதனால் எனக்கு இதைப் பற்றி தெரியாது.

இது எனக்கு ஷாக் ஆக தெரியவில்லை. ஏனெனில் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவங்க போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று சொன்னால் தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதில் எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் பிளட் டெஸ்ட் எப்படி கொடுத்தார் என்றுதான். ஏனெனில் பெரும்பாலான செலிபிரிட்டிகள் பிளட் டெஸ்ட் கொடுக்கவே மாட்டார்கள் .பாலிவுட்டில் ஷாருக்கான் மகன் பிளட் டெஸ்ட் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது பற்றிய நியூஸ் வரவே இல்லை. கொக்கைன் என்பது நிறைய பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் இப்ப சொல்கிறார் என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை நான் போகணும் என சொல்கிறார். இது நீ கொக்கைன் பயன்படுத்தும் போது உன் குழந்தையை ஞாபகத்திற்கு வரவில்லையா? வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் உடனே கிளம்பி போயிடுவியா? என் அம்மா இறந்து விட்டார் ஆனால் படப்பிடிப்பு தான் முக்கியம் என இருந்த எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். திடீரென இப்போது முளைத்திருக்கிறார்கள் ஸ்ரீகாந்த் ரசிகர்கள். இதற்கு முன் எங்கே போனார்கள்? என் தலைவருக்கு படமே கிடைக்கவில்லை என புலம்புகிறீர்கள் .

இப்படி கொக்கைன் பயன்படுத்தினால் எப்படி கிடைக்கும்? பாரதிராஜா சார் இப்போது வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் என்ன ? அதை எல்லாம் யோசிக்க வேண்டும். சினிமாவில் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற துடிப்பு இன்னும் அவரை விட்டு போகவே இல்லையே. ஏனெனில் அவர் இதுவரைக்கும் டிரக்ஸை தொடவே இல்லை. எனக்கு தெரிந்து நிறைய தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். தயவு செய்து நிறுத்துங்கள் தம்பி என்று. மறுநாள் காலையில் வந்து வேறு மாதிரி நடித்து கொடுக்கிறார்கள்.

வேறு மாதிரியான ஸ்கிரிப்ட் வருகிறது. அதனால் தயாரிப்பாளர்களின் பணம்தான் வீணாக போகிறது. டிரக்ஸ் அடிச்சிட்டு உட்கார்ந்து எழுதினால் தான் ஸ்கிரிப்ட் வரும் என நினைக்கிறார்கள். ரொம்ப கண்றாவியாக இருக்கிறது. தக் லைஃப் எல்லாம் ஒரு ஸ்கிரிப்ட்டா? நான் அப்போவே சொன்னேன். பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சை நோட்டீஸ் பண்ணுங்க என்று.

எல்லாருடைய முகமும் மலர்ந்து போய் பிரைட் ஆக இருந்தது. அது ஆல்கஹால் கிடையாது. கஞ்சாவும் கிடையாது. இப்போ வருகிற ஸ்க்ரிப்டில் நமக்கு ஆயிரம் மெசேஜ் கொடுக்க ட்ரை பண்ணுகிறார்கள். முன்பெல்லாம் ஸ்கிரிப்ட் சில்லாக இருக்கும். இதை அடிச்சிட்டு கிரியேட்டிவிட்டியில் உட்கார்ந்து எழுதுகிறோம் என்றால் தக் லைஃப் மாதிரிதான் கிடைக்கும். கொக்கைன் சாப்பிட்டிருச்சு என்றுதான் சொல்லுவோம். உடனே மணிரத்தினம் பண்ணுகிறாரா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர் வேறு ஏதாவது மெடிசின்ஸ் கூட சாப்பிட்டு கொண்டு இருக்கலாம். மருத்தவர்கள் சரி பண்ணுகிறார்கள் ப்ரோ என சுசித்ரா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago