இனிமேல் இதை செய்யவே மாட்டேன்… சுசித்ராவின் திடீர் முடிவால் அதிர்ந்த ரசிகர்கள்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:41  )

Suchitra: சுசி லீக்ஸ் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட பாடகி சுசித்ரா தற்போது வெளியிட்டு இருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் சுசித்ரா. ஆனால், சில ஆண்டுகள் முன்னர் இவருடைய எக்ஸ் வலைதளத்தில் முக்கிய பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது.

இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுசி லீக்ஸ் என அழைக்கப்பட்ட இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என சுசித்ராவும், அவருக்கு மனநிலை சரியில்லை என அவருடைய முன்னாள் கணவர் கார்த்திக்கும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வாய்ப்புகள் குறைந்து மொத்தமாக வெளியேறினார். இதை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பேட்டி கொடுக்க தொடங்கினார் சுசித்ரா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் மீண்டும் முக்கிய பிரபலங்கள் குறித்து அதிர்ச்சி அளிக்கும் சில தகவல்களை தொடர்ந்து பேசி வந்தார்.

அவருடைய கணவர் கார்த்திக் குறித்தும் அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களை உச்சகட்ட ஷாக்கை ஏற்படுத்தியது. கோலிவுட்டில் இருக்கும் எல்லா பிரபலங்கள் குறித்தும் அவர் கூறிய தகவல்கள் அனைத்துமே முகம் சுளிக்கும் வகையில் அமைய ரசிகர்கள் அவரை வசைபாடத் தொடங்கினர்.

இந்நிலையில் சுசித்ரா தன்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் போட மாட்டேன். மும்பை சென்று அங்கேயே செட்டிலாக போகிறேன்.

அங்கு அமைந்திருக்கும் குழந்தைகளுக்கான மாத இதழில் பணியாற்றப் போகிறேன். இது என்னுடைய நீண்ட கால கனவு என அவர் தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்பாடி என கமெண்ட்களில் பெரிய கும்பிடு போட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

Next Story