அப்ப சிவகார்த்தியேனும் இல்லையா?!.. புறநானூறு பற்றி சுதா கொங்கரா கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்!...
மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர் சுதா கொங்கரா. முதலில் சில படங்களை இயக்கினார். பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின்னர்தான் இறுதிச்சுற்று படத்தை உருவாக்கினார். சாக்லேட் பாய் மாதவனுக்கு குத்துச்சண்டை பயிற்சியாளர் வேடம். நிஜவாழ்வில் குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்த ரித்திகா சிங்கை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
இறுதிச்சுற்று படத்தை தெலுங்கு, ஹிந்தியிலும் இயக்கினார். படமோ சூப்பர் ஹிட். அதன்பின் சூர்யாவை வைத்து சுதா கொங்கரா எடுத்த படம்தான் சூரரைப்போற்று. ஒரு ரூபாய் டிக்கெட்டுக்கு விமான பயண சேவையை கொடுக்க நினைத்த ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் நிஜக்கதைக்கு தனது ஸ்டைலில் திரைக்கதை எழுதி இருந்தார்.
இந்த படத்தில் சூர்யாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் இதே கதையை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து எடுத்தார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. சுமார் 80 கோடியில் உருவான இந்த திரைப்படம் 25 கோடியை மட்டுமே வசூல் செய்தது.
அதன்பின் மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற படம் அறிவிக்கப்பட்டது. 1950களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை அது. ஆனால், அந்த கதையில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா கொங்கரா அதை மறுத்தார். எனவே, அப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.
அதன்பின் அந்த கதையில் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டாலும் ‘இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியுமா?’ என அவர் கேட்க சுதா கொங்கரா மறுத்துவிட்டார். அதன்பின் இந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டுவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுதாகொங்கரா ‘புறநானூறு படம் பல காரணங்களால் தள்ளி போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அந்த படத்தை எடுப்பேன். இறுதிச்சுற்று படத்தை விட 100 மடங்கு, சூரரைப்போற்று படத்தை விட 50 மடங்கு என் மனதுக்கு நெருக்கமான கதை புறநானூறு. ஒடுக்குமுறைக்கு எதிரான படமாக அது இருக்கும்’ என சொல்லி இருக்கிறார்’ என சொல்லி இருக்கிறார்.
சுதா கொங்கரா சொல்வதை பார்க்கும்போது இப்படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கவில்லை என்றே புரிந்துகொள்ளலாம்.