Categories: latest news

18 வயசுல போனவன்.. 32 வயசுலதான் வந்தான்.. பல வருடம் மகனை பிரிந்த மணிரத்னம்

இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் முதன்மையாக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். 1983 முதல் இப்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆக தன்னுடைய தனித்தன்மையால் பல படங்களை கொடுத்திருக்கிறார். காதலை மிக அழகாக மென்மையாக எதார்த்தமாக காண்பிப்பதில் ஆகச்சிறந்த இயக்குனர் மணிரத்னம். வளவளவென்று தொண்டை கிழிய பேசுவது போல எல்லாம் வசனங்கள் இவருடைய படங்களில் இருக்காது.

கேமரா ஒளிப்பதிவு கலை போன்ற அனைத்து டெக்னிக்கல் விஷயங்களும் இவரது படத்தில் தரமாக அமைந்திருக்கும். இவர் இயக்கிய எல்லா படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. படம் சுமாராக இருந்தாலும் அந்த படத்தின் பின்னணி இசை பாடல்கள் படத்தை மேலும் மெருகேற்றி காட்டும். அதில் முக்கிய பங்களிப்பு வாய்ந்தவர்கள் இளையராஜாவும் ரகுமானும் .

பகல் நிலவு, கடல், காற்று வெளியிடை போன்ற படங்கள் இவரது திரை பயணத்தின் சாதனைகளின் திருஷ்டியை கழிக்கும் கரும்புள்ளிகள். முதன் முதலில் இருட்டை ரசிக்க வைத்தார் இயக்குனர் மணிரத்னம். இதுதான் அவருடைய தனித்தன்மையும் கூட. அவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் பல்லவி அனுப்பல்லவி. இது ஒரு கன்னட மொழி படம். அதிலிருந்து இன்று வரை அவருக்கு என ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு சினிமாவில் ஒரு மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தற்போது தக் லைஃப் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கமலுடன் இணைந்து இருக்கிறார் மணிரத்னம். இந்த நிலையில் சுஹாசினி அவருடைய மகனை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார் .இவர்களுக்கு ஒரே ஒரு மகன் .பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே வெளிநாடு சென்று விட்டாராம். அதன் பிறகு 32 வது வயதில் தான் திரும்ப வந்தார். விடுமுறை தினம் மட்டும் அவ்வப்போது வந்து செல்வார்.

manison

அவருக்கான ஒரு அறிவை தேடி போனார். அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் குறுக்கே நிற்கவில்லை. இப்போது எங்களுடனே இருந்து வருகிறார். ஒரு மகனுக்கும் அம்மாவுக்கும் இடையில் இருக்கும் ஹனிமூன் மாதிரி இப்போது இருக்கிறது. அந்த அளவுக்கு நான் அதை மகிழ்ச்சியாக கடந்து வருகிறேன் என்று சுஹாசினி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

2 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

5 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

17 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

18 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

18 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

20 hours ago