கடைசி நேரத்தில் கைய விரிச்ச நிறுவனம்!.. காஞ்சனா 4 ஹிந்திக்கு தாவியதற்கு இதான் காரணமா?..

by ramya suresh |
கடைசி நேரத்தில் கைய விரிச்ச நிறுவனம்!.. காஞ்சனா 4 ஹிந்திக்கு தாவியதற்கு இதான் காரணமா?..
X

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடன அமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதனை தொடர்ந்து ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகின்றார். ஹாரர் திரைப்படங்களை மக்களுக்கு பிடித்த வகையில் இயக்கி கொடுத்து வருகின்றார் ராகவா லாரன்ஸ்.

முனி திரைப்படத்தின் மூலமாக பேய் திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதனைத் தொடர்ந்து காஞ்சனா திரைப்படத்தின் பாகங்களை இயக்கி வருகின்றார். இதற்கிடையில் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் 2011 ஆம் ஆண்டு காஞ்சனா என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காஞ்சனா 2 திரைப்படத்தையும், 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். காஞ்சனா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை அவரே இயக்கி நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி விட்டதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாகவும், மேலும் பாலிவுட் நடிகை நேரா பதேகி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

காஞ்சனா 2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகித்திருந்தது. அதனைத் தொடர்ந்து காஞ்சனா 3 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படத்தையும் சன்பிக்சர் நிறுவனம் தான் தயாரிக்கப் போகின்றது என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் மும்பையை சேர்ந்த கோல்டு மைன்ஸ் என்கின்ற நிறுவனம் தயாரித்து வருவதாக கூறப்பட்டது.

திடீரென்று எதற்கு மும்பையை சேர்ந்த நிறுவனம் காஞ்சனா 4 திரைப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கின்றது. எதற்காக இந்த மாற்றம் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது காஞ்சனா 4 திரைப்படத்தின் மொத்த கதையையும் ராகவா லாரன்ஸ் தயார் செய்துவிட்டதாகவும் இதன் பட்ஜெட் மட்டும் 100 கோடிக்கு மேல் ஆகும் என்று கூறியிருக்கின்றார் ராகவா லாரன்ஸ்.

இதை கேட்டு ஷாக்கான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் அந்த அளவுக்கு விற்பனை ஆகாததால் 60 கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை எடுக்கலாம் என்று கூறியிருக்கின்றது. அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவை சேர்ந்த பல தயாரிப்பாளர்களிடம் பேசி பார்த்திருக்கின்றார்.

இறுதியாக மும்பையை சேர்ந்த கோல்டு மைன்ஸ் நிறுவனம் ராகவா லாரன்ஸ் கேட்ட தொகையை கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணத்தால் அந்த நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிப்பதற்கு ராகவா லாரன்ஸ் முடிவு செய்து இருக்கின்றார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் படம் தொடர்பான டீசர் அல்லது அப்டேட் எதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காஞ்சனா திரைப்படத்தின் முதல் இரண்டு பாகத்தை காட்டிலும் மூன்றாவது பாகம் சுமாராகவே இருந்ததால் காஞ்சனா 4 படத்திற்கு மிகப்பெரிய தொகையை செலவிட முடியாது என்பதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.

Next Story