டூப்புன்னு சொன்னவனெல்லாம் இப்போ லைன்ல வா!.. மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..

by ramya suresh |
டூப்புன்னு சொன்னவனெல்லாம் இப்போ லைன்ல வா!.. மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..
X

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்து வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் வேட்டையன் திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் 250 கோடி வசூல் செய்து ஒரு சுமாரான வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது.

பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வரும் இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது. ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் அதே அளவுக்கு கூலி திரைப்படமும் ஹிட் அடிக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்துடன் முடிவடையும் என்று கூறப்படுகின்றது. மார்ச் மாதத்தில் இருந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம் ரஜினி. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்த நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கு தயாராகி இருக்கின்றார் நெல்சன் திலிப்குமார்.

அனிருத் இசையமைக்க, சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியாகி இணையதள பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இந்த வீடியோ எந்த அளவுக்கு வைரலானதோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்து வந்தது .

அதாவது இந்த வீடியோவில் வந்தது உண்மையான நடிகர் ரஜினிகாந்த் கிடையாது. நெல்சன் அனௌன்ஸ்மெண்ட் வீடியோவிற்காக டூப் போட்டு எடுத்திருக்கின்றார் என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சன் பிக்சர் நிறுவனம் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றது.

அதாவது ஜெயிலர் 2 திரைப்படத்தின் அனௌன்ஸ்மெண்ட் டீசர் மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் அனைத்து காட்சிகளிலும் தானே நடித்திருக்கின்றார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் டூப்புனு சொன்னவன் எல்லாம் இப்போ லைன்ல வா என்று வீடியோவை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஒவ்வொரு சீனும் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக காட்டப்பட்டிருக்கின்றது.

Next Story