TVK Vijay: அரசியல் என்பது சுலபமில்லை. பல வகைகளிலும் இடையூறு வரும். எல்லாவற்றையும் சமாளித்தால் மட்டுமே அரசியலில் தாக்குபிடிக்க முடியும். எல்லாவகையிலும் சூழ்ச்சிகளும் சூதுகளும் வரும். உடன் இருப்பவர்களே குழி பறிப்பார்கள். நம்பிகைக்கு உரியவர்களே நம்மை விட்டு விலகி வேறு கட்சிக்கு தாவிவிடுவார்கள்.
அவ்வளவு நல்லவரான விஜயகாந்துக்கே அவரின் சில எம்.எல்.ஏக்கள் துரோகம் செய்து விட்டு வேறொரு அரசியல் கட்சி பக்கம் போனார்கள். எதற்கும் கலங்காத விஜயகாந்த் அந்த துரோகத்தை தாங்க முடியாமல் தவித்தார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
அரசியல் களத்தில் விளையாடுவதற்கு சாமர்த்தியமும், சகிப்புத்தன்மையும், பொறுமையும், புத்திசாலித்தனமும் வேண்டும். மக்கள் ஆதரவு வேண்டும். மனதிற்குள் இருப்பவற்றை அப்படியே பேசக்கூடாது. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே அரசியல் செய்ய வேண்டும். விஜயகாந்துக்கு அது செட் ஆகவில்லை. அதனால்தான் அவரை ட்ரோல் செய்தார்கள்.
விஜய் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். நாளை விக்கிரவாண்டியில் அவரின் கட்சி மாநாடு நடக்கவிருக்கிறது. கட்சி தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். மது அருந்திவிட்டு வரக்கூடாது, பைக்கில் வருவதை தவிர்க்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார்.
நாளை காலை முதலே தொண்டர்கள் மாநாட்டிற்கு வரவிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் விஜய் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் பேசவிருக்கிறார். எனவே, அவர் என்ன போசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.
ஒருபக்கம், விஜய் நாளை மாலை 6.30 மணிக்கு பேச துவங்கும் நிலையில், மாலை 6 மணிக்கு சன் டிவியில் ரஜினியின் ஜெயிலர் படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். நாளை முத்து படத்தைத்தான் திரையிட திட்டமிடிருந்தனர். ஆனால், விஜயின் மாநாடு மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பாதால் ஜெயிலர் படத்தை திரையிடுகிறார்கள்.
ஏனெனில், விஜய் பேச துவங்கும் போது கண்டிப்பாக எல்லா தொலைக்காட்சிகளும் அதை நேரடியாக ஒளிபரப்பு செய்வார்கள். மக்களும் அதை பார்ப்பார்கள். அதை திசை திருப்பவே சன் டிவி ஜெயிலர் படத்தை திரையிடுகிறது என்றே சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…
Delhi Ganesh:…
கங்குவா படம்…