சுனைனாவின் வருங்கால 'கணவரை' வச்சு செஞ்ச இர்பான்... வைரலாகும் வீடியோ!

by ராம் சுதன் |

யூடியூப் விமர்சகர் என்னும் அடைமொழியுடன் வலம்வரும் இர்பானை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவை விமர்சனம் செய்பவராக இருந்தாலும் கூட அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களுக்கு பயங்கர கண்டெண்ட் கொடுப்பவர் என்பதால் சமூக வலைதளங்களிலும் பயங்கரமாக அடிபடுவார்.

சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்து சர்ச்சையில் சிக்கினார். அனைவரும் அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்ட பின்னர் பெயருக்கு ஒரு மன்னிப்பு வீடியோ கேட்டு பின்னர் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

முன்னதாக இவரின் கார் விபத்துக்குள்ளாகி அதிலும் பயங்கர அடிபட்டார். எவ்வளவு அடிபட்டாலும் துடைத்து தூரப்போட்டு அடுத்த வீடியோவை அப்லோடு செய்வதில் இர்பானுக்கு நிகர் யாருமில்லை. இந்தநிலையில் சமீபத்தில் இவர் அப்லோடு செய்த வீடியோ ஒன்று இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

யூடியூபரும், நடிகை சுனைனாவின் வருங்கால கணவருமான கலீத் அல் அமேரி தற்போது இந்தியா வந்துள்ளார். அவரை இங்குள்ள சுவையான உணவகங்களுக்கு இர்பான் அழைத்து சென்று சேர்ந்து உணவருந்தி அதன் அருமை பெருமைகளை எடுத்துரைத்து வருகிறார்.

அந்தவகையில் மீன் கடை ஒன்றுக்கு கலீத்தை அழைத்துச்செல்லும் இர்பான் அவருக்கு மிளகாய் மற்றும் மிளகாய்த்தூள் அதிகம் போட்டு காரமான மீன் வறுவல் ஒன்றைத் தானே செய்து பரிமாறுகிறார்.

அதை சாப்பிட்டு கலீத் கண்ணீர் விட இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் நல்ல விஷயமா? என இர்பானை கன்னாபின்னாவென்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://twitter.com/thoatta/status/1811279943571243395

Next Story