Categories: Cinema News

4க்கே முக்குச்சு… சுந்தர்.சியின் புது திட்டம் பலிக்குமா? கொடுமையா இருக்கே!..

Sundar.c: தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெறும் என்றால் அது ஹாரர் திரைப்படங்களுக்கு தான் பொருந்தும்.

ஹாரர் திரைப்படங்களுக்கு மற்ற மொழிகளை ரசிகர்கள் பார்த்து வந்த காலத்தில் முதல் முறையாக ஓவர் டிராமடிக்காக இல்லாமல் திரைக்கதைகளால் ரசிகர்களை அலறவிட்ட முக்கிய திரைப்படங்களில் ஒன்று அரண்மனை.

சுந்தர் சி இயக்கத்தில் இத்த திரைப்படம் நான்கு பாகங்கள் கடந்து இருக்கிறது. அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகத்தில் சுந்தர்.சி நடிக்க அவருடன் ஆண்ட்ரியா, வினய், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இரண்டாவது பாகத்தில் ஹன்சிகா, சித்தார்த் உள்ளிட்டோருடன் சுந்தர்.சி நடித்திருந்தார்.

மூன்றாவது பாகத்தில் சுந்தர்.சி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஆர்யா, ராஷி கன்னா நடித்திருந்தனர். நான்காவது பாகத்தில் தமன்னா, ராஷி கன்னாவுடன் சுந்தர்.சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில் நான்கு பாகங்களுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதிலும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தமிழ் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மே மாதம் திரையரங்குகளில் வெளியான அரண்மனை4 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சுந்தர் சி ஐந்தாவது பாகத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் ஆறாவது பாகத்தை எடுத்து முடிவிலும் சுந்தர்சி இருப்பதாக கூறப்படுகிறது.

Published by
ராம் சுதன்