Cinema News
காப்பி கேட் இல்ல..காப்பி டைனோசர்! எல்லாமே காப்பிதானா? அட்லீக்கு குருவே இவர்தானாம்
மற்ற மொழி படங்களில் இருந்து கதைகளை காப்பியடித்து எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. அப்படி எடுக்கும் இயக்குநர்களை காபி கேட் என்று கூறுவார்கள். ஆனால் இவரை காப்பி டைனோசர் என்று அழைக்கலாம்.
நமக்கு தெரிந்த அட்லி ஏ ஆர் முருகதாஸ் இவர்கள்தான் பல படங்களில் இருந்து சில காட்சிகளை காப்பியடித்து படத்தை இயக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு குருவாகவே இருக்கிறார் சுந்தர் சி .
எத்தனையோ படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருக்கும் சுந்தர் சி அவர் எடுத்த பெரும்பாலான படங்கள் காப்பி அடித்ததாகவே கூறப்படுகின்றன .அதில் அவர் எடுத்த வின்னர் திரைப்படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதைப்பற்றி அவர் கூறும் போது முதல் பாதி ஐந்து தெலுங்கு படத்தின் டிவிடி இரண்டாம் பாதியில் மற்ற ஐந்து படத்தின் டிவிடி இவைகளை வைத்து தான் இந்த படத்தை எடுத்ததாகவும் வடிவேலு காமெடியை வடிவேலுவே பார்த்துக்கொண்டார் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சுந்தர்சி .
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான கலகலப்பு பாலிவுட்டில் ரிலீசானடெல்லி பெல்லி என்ற திரைப்படத்தின் காட்சிகளை கலகலப்பு படத்தில் இரண்டாம் பாதியில் முழுவதும் வைத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் . ஆனால் உண்மையிலேயே இந்த படத்தை ஜெர்மனில் ரிலீசான சோல் கிச்சன் என்ற படத்தில் இருந்து தான் காப்பி அடித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .
படம் முழுக்க அந்த சோல் கிச்சன் படத்தின் காட்சிகள் தான் கலகலப்பு படத்திலும் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர். அதற்கு அடுத்தபடியாக சுந்தர் சியின் ஹிட் லிஸ்டில் எப்போதுமே ஒரு தனித்துவமாக இருக்கும் திரைப்படம் என்றால் அது உள்ளத்தை அள்ளித்தா. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதுவும் ஒரு சில படங்களின் காபி தான் என சொல்லப்படுகிறது .அதாவது சிவாஜி நடித்த சபாஷ் மீனா, ஜெய்சங்கர் நடித்த பொம்மலாட்டம், ஹிந்தியில் அமீர்கான் சல்மான் கான் நடித்த அந்தாஸ் அப்னா அப்னா போன்ற மூன்று படங்களின் கலவை தான் இந்த உள்ளத்தை அள்ளித்தா என்று சொல்லப்படுகிறது.
அதற்கடுத்தபடியாக கார்த்திக் நக்மா நடித்த மேட்டுக்குடி திரைப்படம் மலையாளத்தில் ரிலீசான ஒரு படத்தின் காபி தான் என சொல்லப்படுகிறது. மோகன்லால் கவுதமி ஆகியோர் நடிப்பில் வெளியான ஹைநாஸ் அப்துல்லா என்ற மலையாள படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்த மேட்டுக்குடி என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி அவர் எடுத்த அருணாச்சலம் ,நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற படங்கள் எல்லாமே மற்ற படங்களில் காபி தான் என செய்திகள் கூறுகின்றன.