கூலி படத்தில் ஸ்பெஷல் கேமியோ பண்ணும் அந்த ஹீரோ!.. இன்னும் எத்தன பேர் இருக்கீங்க?!...

by சிவா |
கூலி படத்தில் ஸ்பெஷல் கேமியோ பண்ணும் அந்த ஹீரோ!.. இன்னும் எத்தன பேர் இருக்கீங்க?!...
X

Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் கூலி. ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட்டுக்கு பின் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் தோல்வி படம் இல்லை.

ஜெயிலர் படத்திற்கு முன்பே கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், என்ன காரணமோ ரஜினி அதில் நடிக்கவில்லை. நண்பர் கமல் தயாரிப்பாளர் என்பதால் அவரிடம் நாம் விரும்பும் சம்பளத்தை கேட்க முடியாது என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.

எனவே, நானே நடிக்கிறேன் என கமல் வந்தார். அப்படி உருவான விக்ரம் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. 500 கோடி வரை இப்படம் வசூல் செய்தது. இது ரஜினிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படி உருவாகி வரும் படம்தான் கூலி.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் படத்தில் வழக்கமாக வருவது போல இந்த படத்திலும் பல மொழியிலிருந்து நடிகர்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சௌபின் சஹீர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அதேபோல், பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் சத்தியராஜ் கை கோர்த்திருக்கிறார். எனவே, கூலி திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தில் ஒரு ஸ்பெஷல் கேமியோ வேடத்தில் நடிக்க விருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். எனவே, அப்போது முதலே அவருக்கு லோகேஷுடன் நல்ல நட்பு உண்டு. அதேநேரம், கூலி படத்தில் இவருக்கு முக்கிய கேமியோவா இல்லை லியோ படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போல ஒரு காட்சியில் வந்து விட்டு காணாமல் போய்விடுவாரா என்பது தெரியவில்லை.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Next Story