அப்போ அதெல்லாம் பொய்யா? கமல் படம் குறித்து அன்பறிவு சொல்லும் சூப்பர் அப்டேட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:26  )

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு திரைப்படம் கைவிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது குறித்து மற்றொரு சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வரிசையாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இருந்தும் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்த திரைப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக அவர் தன்னுடைய சினிமாவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.

அவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படம் கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. இப்படத்தின் சூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் விரைவில் மற்ற பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து தெலுங்கில் உருவாகும் கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜன் விக்ரம் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது.

திரைப்படம் சமீபத்தில் கைவிடப்படும் என தகவல்கள் கசிந்தது. ஆனால் இது குறித்து அன்பறிவு கூறுகையில், தாங்கள் இயக்கும் KH237 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட இருக்கிறது. கமல் சாருக்கு நன்றி.

எங்களுடைய கனவு திரைப்படத்திற்கு அவர் வாய்ப்பு அளித்திருக்கிறார். இத்திரைப்படம் கண்டிப்பாக எல்லா சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

Next Story