கார்த்திக் சுப்பாராஜிடமும் பஞ்சாயத்து!.. ஒருத்தர் விடாம ஏழரையை இழுக்கும் சூர்யா!..
நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் இவர் சினிமாவில் களம் இறங்கினார். துவக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஓடவில்லை. அதோடு, சூர்யாவுக்கு பெரிதாக நடிப்பும் வரவில்லை. சாக்லேட் பாய் போல நடித்து வந்தார்.
பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடித்த போதுதான் நடிப்பென்றால் என்ன? கண்களால் எப்படி பார்க்க வேண்டும்? எப்படி உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்? என அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு அதை சொல்லி கொடுத்தவர் அந்த படத்தில் வேலை செய்த இயக்குனர் அமீர். அமீர் இயக்கிய முதல் படமான மௌனம் பேசியதே படத்திலும் சூர்யா நடித்தார்.
காக்க காக்க படம் இயக்குனர் கவுதம்மேனன் சூர்யாவை ஸ்டைலான ஒரு ஹீரோவாக மாற்றினார். மேலும், வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு லவ்வர் பாயாக மாற்றினார். அதே சூர்யாவை அதிரடி போலீஸ் அதிகாரியாக மாற்றியது இயக்குனர் ஹரி. சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என கர்ஜித்தார் சூர்யா.
இந்த படங்கள் மூலம் பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறினார் சூர்யா. சூரரைப்போற்று படம் மூலம் சூர்யாவை ஒரு தேர்ந்த நடிகராக மாற்றினார் சுதா கொங்கரா. இப்படி சூர்யாவின் வளர்ச்சியில் பல இயக்குனர்களின் பங்கு இருக்கிறது. ஆனால், மேலே சொன்ன எல்லா இயக்குனர்களோடும் ஏழரையை இழுத்திருக்கிறார் சூர்யா என்பதுதான் அவரின் ரெக்கார்டாக இருக்கிறது. நடிப்பு சொல்லி கொடுத்த அமீருக்கு சூர்யா குடும்பம் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு துருவ நட்சத்திரம் பட வேலையில் கவுதம் மேனன் இருந்த போது அப்படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. வணங்கான் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு படத்திலிருந்து வெளியேறினார். ஹரி இயக்கத்தில் யானை படமும் இவர் நடிக்க வேண்டியதுதான். ஆனால், மறுத்துவிட்டார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருந்த புறநானூறு படத்திலிருந்தும் வெளியேறிவிட்டார்.
இப்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் பகுதியில் நடந்து வந்தது. படப்பிடிப்பின் போது கார்த்திக் சுப்பாராஜுக்கும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மனஸ்தாபமாக மாறியதாக சொல்லப்படுகிறது.
சூர்யா இன்னும் யாரிடமெல்லாம் ஏழரையை இழுப்பாரோ!....