நல்லவேளை!.. நாம வாங்க வேண்டிய அடியை சூப்பர் ஸ்டார் வாங்கிட்டாரு!.. பெருமூச்சு விட்ட பெருமாச்சு!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:58  )

சன் பிக்சர்ஸ் தயாரித்து பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடைசியாக சூர்யா நடித்த தியேட்டர்களில் வெளியானது. அதற்கு முன்னதாக சூர்யா நடித்த நல்ல படங்கள் என்றால் அது சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் தான். ஆனால், அந்த படங்கள் ஓடிடியில் மட்டுமே நேரடியாக வெளியாகின.

விஜய் காத்திருந்து மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட்டதை போல சூர்யா செய்யவில்லை. நேரத்தை வீணடித்து விடக் கூடாது என்றும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார்.

வாடிவாசல் படத்துக்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்காமல் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பல கோடி சம்பளத்தை வாங்கி வரும் சூர்யா தற்போது கங்குவா இந்த ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரொம்பவே ஹேப்பியாகி விட்டாராம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அதே தேதியை குறி வைத்த நிலையில், ரஜினியுடன் மோதினால் அடி கன்ஃபார்ம் என நினைத்து ஒதுங்கிய சூர்யாவுக்கு எல்லாம் நன்மைக்கே என்பது போல தற்போது கனமழையில் இருந்து அடிவாங்காமல் தப்பித்து விட்டார்.

ரஜினிகாந்த் வான்டட்டாக ஆயுத பூஜைக்கு வந்து போன வருஷம் லியோ படம் வசூல் செய்தது போல வசூல் செய்யலாம் என நினைத்த நிலையில், 4 நாட்களில் படத்தை தியேட்டர்களில் இருந்து கனமழை வாஷ் அவுட் செய்துள்ளது. கனமழை குறைந்த பின்னர் மீண்டும் வேட்டையன் பிக்கப் ஆகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

வீம்புக்கு நாமும் வந்திருந்தால் வீணாகத்தான் போயிருக்கும் என ஞானவேல் ராஜா தப்பிச்சோம்டா சாமி என பெருமூச்சு விட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.

Next Story