வேட்டையனை கலாய்த்த ஞானவேல் ராஜா!.. ரியாக்ட் செய்யாத சூர்யா!.. இதெல்லாம் சரியா?!...
Vettaiyan: நடிகர் சூர்யாவின் உறவினர் மற்றும் பினாமியாக கருதப்படுபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாறினார். முதல் படத்திலேயே அப்பட இயக்குனர் அமீரோடு பிரச்சனை செய்து கொண்டார். படம் பாதிமுடிந்த நிலையில் 'இனிமேல் இப்படத்திற்கு செலவு செய்ய மாட்டேன்' என ஒதுங்கி கொண்டார். எனவே, அமீர் பல இடங்களில் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து முடித்தார்.
ஆனால், படத்தை பார்த்துவிட்டு ‘நீங்கள் செய்த 1.25 கோடியை கொடுத்துவிடுகிறேன். படத்தை எனக்கு எழுதி கொடுத்துவிடுங்கள்’ என தயாரிப்பாளர் சங்கம் மூலம் காயை நகர்த்தி அமீரிடம் எழுதி வாங்கிக்கொண்டார். ஆனால், அந்த பணத்தை அமீருக்கு கொடுக்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன்புதான் இந்த விஷயத்தை ஊடகங்களில் சொன்னார் அமீர்.
ஆனால், அவரை 'திருடன்' என விமர்சித்தார் ஞானவேல் ராஜா. இதற்கு பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி என் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க மன்னிப்பு கேட்டார் ஞானவேல். அப்போதும் சூர்யாவும், கார்த்தியும் எதுவும் பேசவில்லை. ஞானவேல் ராஜா பேசியது தவறு என இருவருமே சொல்லவில்லை.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்து உருவான திரைப்படம்தான் கங்குவா. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ரஜினியின் வேட்டையன் படம் அதே தேதியில் வருகிறது என்பதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். 'நான் ரஜினி ரசிகன்.. அவருக்கு போட்டியாக என் படத்தை விட மாட்டேன்’ என சொன்னார் ஞானவேல் ராஜா.
ஆனால், வேட்டையன் படம் பெரிய வசூலை பெறவில்லை. அதன்பின் ரசிகர் ஒருவர் அவரிடம் ‘கங்குவாவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என இதுவரை எதுவுமே சொல்ல வில்லையே’ என கேட்க, ‘சமீபத்தில் ஒரு பெரிய நடிகர் படம் வெளியானது. அந்த படத்தில் நடிக்கும் ஒவ்வொரையும் தனித்தனியாக விளம்பரம் செய்தார்கள். அது படத்தின் வெற்றிக்கு உதவியதா?’ என நக்கலாக கேட்டார் ஞானவேல் ராஜா.
அதோடு, ஒரு பேட்டியில் நான் வேட்டையன் படத்தைத்தான் சொன்னேன் என ஒத்துக்கொண்டார். அதன்பின் இது பிரச்சனை ஆகும் என புரிந்துவிட்டதால் நான் ஒரு ஹிந்தி படத்தை சொன்னேன் என பொய் சொன்னார். இதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ஞானவேல் ராஜா பேசியது தவறு என சூர்யா சொல்லவே இல்லை. அவரை கண்டிக்கவும் இல்லை.
இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.