விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் வருகின்ற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அப்பா வேற நான் வேற என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேட்டியாளர்களை சந்தித்த சூர்யா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் அனல் அரசு ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதிக்கும் சண்டைக்காட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது தான் சூர்யாவை பார்த்ததாகவும், தான் எழுதியுள்ள கதைக்கு அவர் சரியாக இருப்பார் என நினைத்து விஜய் சேதுபதியிடம் கேட்டதும் சூர்யாவிடம் விருப்பத்தை கேட்டு அனுப்பி வைத்தார். மேலும், சூர்யாவின் ஈடுபாடும் கடுமையான உழைப்பும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகும் என பேசியுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சூர்யா சேதுபதியிடம் கேட்ட போது, அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது பின்பு இப்படி ஒரு இயக்குநருடன் படம் பண்ணப்போறோம் என்ற சந்தோஷம், சண்டைக்காட்சி அதிகமாக உள்ள படம் என்பதும், இயக்குனர் என் மேல் வைத்த நம்பிக்கை தனக்கு ஒரு தைரியத்தை கொடுத்ததாகவும் கூறினார்.
ஆரம்பத்தில் சர்சையில் சிக்கியதால் தனது பெயரை சூர்யாவிலிருந்து சூர்யா சேதுபதியாக மாற்றியதற்கு காரணம் நான் ஒரு நோக்கத்தில் சொன்னேன் அது என்னை சுற்றிவுள்ளவர்களுக்கு புரிந்தது. ஆனால், மற்றவர்கள் அதை தப்பாக எடுத்துக்கொண்டனர். அதற்கு பதில் சொல்லவே முடியாது அத அப்படியே விட்டுடலாம் என பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி படத்தை பார்த்து சூர்யாவை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். சூர்யாவிற்கு தன் அப்பாவை பார்த்து தான் நடிக்கும் ஆசை வந்ததாகவும், மேலும்,விஜய் மற்றும் சிம்புவின் ரசிகன் எனவும் பேசியிருந்தார்.
இயக்குனர் அனல் அரசு இது வரை விஜய்யுடன் 10 படங்கள் பணிப்புரிந்துள்ளதாகவும் அவர் கடைசியாக நடிக்கும் படத்திற்கு தன்னை அழைத்துள்ளார்.எல்லா படத்தையும் விட ஜனநாயகன் படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் சண்டைக்காட்சிகள் அமைந்திருக்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…