20 வருஷமா அத நான் பண்ணல!.. கெட்டவன ரசிக்கிறாங்க... ரோலக்ஸ் குறித்து மனம் திறந்த சூர்யா..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:28  )

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது,

படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. சூர்யாவின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் எங்கிலும் வெளியாக உள்ளது. கட்டாயம் இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும் படத்தின் பிரமோஷன் சூடு பிடித்து வருகின்றது.

படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று படம் குறித்து பிரமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு தனியார் youtube சேனல் ஒன்றுக்கு சூர்யா பேட்டி அளித்திருந்தார். அதில் கங்குவா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விக்ரம் திரைப்படத்தில் தான் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் அவர் பகிர்ந்திருந்தார். 'விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அந்த படத்தில் நான் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் வருவேன். அதற்காக நான் அரை நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அந்த படம் குறித்து எந்த ஒரு ஏற்பாடும் நான் செய்யவில்லை. எந்த பிளானும் எனக்கு இல்லை.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். உடனே கேமரா செட் செய்தார்கள். நான் பேச வேண்டிய வசனங்களை கையில் கொடுத்தார்கள். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் பொருத்தவரையில் முழுக்க முழுக்க கெட்டவைகளும் கெட்டவர்களும் நிறைந்த உலகம் அவருடையது. அந்த கெட்டவனை தான் மக்களுக்கும் பிடித்திருக்கின்றது. தான் நடித்த அந்த 2 நிமிட ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அது மட்டும் இல்லாமல் அந்த சீன் எடுக்கும் போது கமலஹாசன் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். அங்கு அவர் மூன்று மணிக்கு வருவார் என்று கூறினார்கள். அதற்கு முன்னதாகவே எனது ஷூட்டிங் முடித்து விட வேண்டும் என்று தீவிரமாக இருந்தேன். அவர் முன் நடிப்பதற்கு எனக்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவருக்கு முன்னால் எப்படி சிகரெட் பிடிப்பது என்று மிகவும் பயந்தேன்.

கடந்த 20 வருடங்களாக புகை பிடிக்கும் காட்சிகள் எதுவும் என் படங்களில் இடம்பெறவில்லை. அதனை நான் செய்யவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் அந்த கேரக்டர் முழுக்க முழுக்க கெட்டவனை சார்ந்தது. இதனால் என் நிஜ கதாபாத்திரத்தை அதில் கொண்டு வரக்கூடாது என்று முடிவு செய்து அந்த கதாபாத்திரத்தில் நடித்து முடித்தேன்' என்று நடிகர் சூர்யா கூறியிருந்தார்.

Next Story