அருவா, வேல்கம்பு, கருப்பு குதிரை! ஒரு வேளை இருக்குமோ? ஹைப்பை ஏத்தும் ‘சூர்யா 45’ போஸ்டர்
சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்ஜே பாலாஜிதான் இயக்க போகிறார் என அனைவருக்குமே தெரியும்.இந்த நிலையில் அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது சூர்யா கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவருடைய 44வது படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்திற்கான தலைப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. முதன் முறையாக கார்த்திக் சுப்பாராஜுவும் சூர்யாவும் இணையும் கூட்டணி என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் ரிலீஸுக்காக காத்திருக்கும் திரைப்படம் கங்குவா.
அந்தப் படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் முதல் சிங்கிள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது கங்குவா திரைப்படம்.
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்தப் படமான 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் இன்றுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போகிறார். முற்றிலும் வித்தியாசமான கூட்டணி என்பதால் படம் என்ன மாதிரியான கதையாக இருக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவரித்திலு இருந்து வருகிறது.
போஸ்டரில் கருப்பு குதிரை, வேல்கம்பு மற்றும் அருவா போன்றவை இருப்பதால் ரசிகர்களே ஆளாளுக்கு இந்த மாதிரியான கதையாகத்தான் இருக்கும் என கூறி வருகிறார்கள். போஸ்டரை பார்க்கும் போது ஒரு வேளை மர்மதேசம் தொடரின் ரீமேக்காக இருக்குமோ என்று கேட்டு வருகிறார்கள். ஒரு காலத்தில் சின்னத்தொடரில் மிகவும் திரில்லிங்கான தொடராக அனைவரையும் மிரட்டிய தொடராக மர்மதேசம் தொடர்தான் இருந்தது.
ஒட்டுமொத்த மக்களின் பேராதரவை பெற்ற ஒரு திரில்லிங்கான தொடராக மர்மதேசம் தொடர் அமைந்தது. சூர்யா 45 போஸ்டருக்கும் மர்மதேசம் தொடருக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்றால் மர்மதேசம் தொடரில் வெள்ளைக் குதிரை இருக்கும். சூர்யா 45 போஸ்டரில் கருப்பு குதிரை இருக்கிறது. அதனால் மர்மதேசம் மாதிரி ஒரு திரில்லிங்கான சப்ஜெக்ட்டாக இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.