டைட்டிலுக்கும் போஸ்டருக்கும் செட் ஆகலயே! சூர்யா 45 பட டைட்டில் இதுதானா? ஹீரோயினும் ரெடி
சூர்யாவின் 45 வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சமீபத்தில் தான் அதன் அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டு இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தான் சூர்யாவின் 45 வது படத்தை தயாரிக்கின்றனர்.
படத்திற்கு இசை ஏ ஆர் ரகுமான். சூர்யாவின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார் சூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்நிலையில்தான் சூர்யாவின் 45 வது படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. ஆர் ஜே வாக இருந்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர் ஜே பாலாஜி.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும் ஒரு இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்தார். பின் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கி அந்த படத்தில் நடிக்கவும் செய்தார். அவர் இயக்கிய இரண்டு படங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன.
அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து அவருடைய 45 வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தின் கதை முதலில் விஜய்க்காக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் இந்த படத்தில் நடிக்காததால் கதைக்களத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து சூர்யாவை வைத்து இந்த படத்தை எடுக்கப் போகிறார் ஆர் ஜே பாலாஜி.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார் போன்ற படங்களில் நடித்தவர். படத்திற்கு ஹின்ட் என்ற தலைப்பை இப்போதைக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் படத்தின் போஸ்டருக்கும் படத்தின் தலைப்புக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத போல் இருப்பதால் ரசிகர்கள் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். போஸ்டரை பார்க்கும்பொழுது அருவா கத்தி குதிரை என ஒரு மர்மமான கதையாக இருக்கும் என எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் அதற்கு ஹிண்ட் என தலைப்பு என்பது சரியாக இருக்காது என்றும் கூறி வருகிறார்கள். காலப்போக்கில் இந்த படத்தின் டைட்டில் கூட மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.