சூர்யா மகன், மகள் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா?!.. நம்பவே முடியலையே!.. போட்டோ பாருங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:55  )

Suriya jyotika: சூர்யா சினிமாவில் நடிக்க துவங்கிய போது அவருடன் பல படங்களிலும் ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் உருவாகி திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா எனும் மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கிறார்கள். அவர்களின் புகைப்படம் மிகவும் அரிதாகவே வெளியாகும்.

அதேநேரம், சூர்யா - ஜோதிகா இருவரின் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகும். தனது குழந்தைகளை ஊடகங்களின் வெளிச்சத்தில் இருந்து தள்ளியே வைத்திருக்கிறார்கள். துவக்கத்தில் அப்பா சிவக்குமாருடன் கூட்டு குடும்பமாகவே சூர்யா வசித்து வந்தார். அதன்பின் சென்னையில் ஒரு தனி வீட்டில் வசித்ததாக சொல்லப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் மும்பைக்கு குடி பெயர்ந்துவிட்டார் சூர்யா. அவரின் குழந்தைகள் இருவரும் தற்போது அங்குதான் படித்து வருகிறார். சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

எனவே, இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மும்பைக்கு ஏன் குடிபெயர்ந்துவிட்டீர்கள்? என்கிற கேள்விக்கு அழகான பதிலை சொன்னார் சூர்யா. என் மனைவி ஜோதிகா எனக்காக சென்னையில் 17 வருடங்கள் இருந்தார். அவரின் பெற்றோர்களை விட்டுவிட்டு என்னுடன் தங்கி இருந்தார்.

இப்போது நான் அவருக்காக மும்பைக்கு போயிருக்கிறேன். ஆண்களுக்கு என்ன தேவையே அந்த தேவை பெண்களுக்கும் இருக்கிறது. அவர் அவரின் பெற்றோருடன் வசிக்கும் நேரத்தை நான் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?. அவருக்கான எல்லாமும் இங்கே இருக்கிறது. அதோடு, என் குழந்தைகளும் மும்பையில் படிப்பதால் நான் இதை செய்தேன்’ என சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக சூர்யா, ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி இருந்தார் ஜோதிகா. தியாவுக்கு 17 வயதும், தேவுக்கு 15 வயதும் ஆகும் நிலையில், அவர்களை பார்த்த ரசிகர்கள் ‘ சூர்யா பசங்க இவ்வளவு பெருசாக வளர்ந்துவிட்டார்களா?’ என ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள்.

Next Story