Suriya: உங்களில் யார் முதல்ல லவ்வ சொன்னது!... சூர்யா என்ன சொல்லிருக்காரு தெரியுமா?...
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார் கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது அதன் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக நடிகர் சூர்யா நடித்து வந்த திரைப்படம் கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது திரைப்படத்தின் பட்ஜெட் தான் அதிகம் இதனால் இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மொத்தம் 30 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாகவும் இதுவரை 400 கோடிக்கு மேல் படம் தற்போது வரை பிசினஸ் செய்திருப்பதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகி வருகின்றது கங்குவார் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பீரியட் படமாக உருவாகி இருக்கின்றது இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருக்கின்றார் நடிகர் சூர்யா மேலும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து இருக்கின்றார் மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றார் கங்குவார் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருப்பதாகவும் இரண்டு பாகங்களையும் சிறுத்தை செய்வாய் இயக்கி முடித்து விட்டதாக கூறப்படுகின்றது முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெரும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று வடக்குழு நம்பிக்கையில் இருக்கிறார்கள் மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருப்பதால் பட குழுவினர் தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் சமீபத்தில் தான் சென்னையில் மிகப்பெரிய அளவில் ஆடியோ லான்ச் நடைபெற்ற முடிந்தது மேலும் நடிகர் சூர்யாவும் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட மொழிகளில் அடுத்தடுத்து இன்டர்வியூ கொடுத்து வருகின்றார் அதில் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றார் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் தனது காதல் கதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்து இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது நடிகை ஜோதிகா சினிமாவிற்கு 18 வயதிற்கு முன்னதாகவே வந்து விட்டார் அவர் ஒரு பாந்திரா பெண் அவருடைய முதல் படம் என்னுடன் தான் இருந்தது நாங்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு திரைப்படங்களில் நடித்திருப்போம் அவர் ஒரு நல்ல நண்பர், வெல்விஷர் மிகுந்த மரியாதையான ஒரு பெண் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டோம் அது காலப்போக்கில் காதலாக மாறியது இப்போது வரை அந்த காதல் நீடித்து வருகின்றது என்று கூறியிருந்தார் மேலும் பேட்டியாளர் உங்களில் யார் முதலில் காதலை கூறியது என்ற கேள்விக்கு பதில் அளித்த சூர்யா நாங்கள் இருவருமே கூறிக்கொள்ளவில்லை எங்கள் இருவருக்குமே தெரியும் நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறோம் என்று அதனால் இருவருமே ஒருவரிடம் ஒருவர் காதலை தெரிவித்துக் கொள்ளவில்லை எங்களுக்கு தெரியும் இருவரில் ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது என்பது என்று அழகாக பதில் அளித்திருந்தார்.