யப்பா!... பார்க்கவே சும்மா பயங்கரமா இருக்கே... வெளியான கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:10  )

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பீரியட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் கெரியரிலேயே அதிக பட்ஜெட் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார் .

சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா சம்பவம் செய்வாரா? சரித்திரம் படைப்பாரா? என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருந்த ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும் நடிகர் சூர்யாவும் இந்த திரைப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார். சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சூர்யாவின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த திரைப்படத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த திரைப்படம் பத்து மொழிக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கின்றார். மேலும் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து படம் தொடர்பான பல விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யாவும் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். பல youtube சேனல்களுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்திருந்தார். அதில் கங்குவா திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி இருக்கின்றது. இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்து விட்டதாக கூறப்படுகின்றது.

கண்டிப்பாக முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும் கங்குவா திரைப்படத்திற்கு சமீபத்தில் தான் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

2 நிமிடம் 20 நிமிஷம் இருக்கும் இந்த வீடியோ பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கின்றது. படத்தை எவ்வளவு சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ளும் வகையில் இந்த மேக்கிங் வீடியோ இருக்கின்றது. இதனை சூர்யா ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.

Next Story