சினிமாவுல சீசன் நடிகர்கள்... அட லிஸ்ட்ல இவங்க எல்லாம் இருக்காங்களா?

by sankaran v |
சினிமாவுல சீசன் நடிகர்கள்... அட லிஸ்ட்ல இவங்க எல்லாம் இருக்காங்களா?
X

சினிமாவில் வெறும் அழகு இருந்தால் மட்டும் பத்தாது. திறமையும் இருக்கணும். அது இல்லன்னா அவ்ளோதான். காணாமப் போயிடுவாங்க என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. சினிமாவில் வரும் சீசன் நடிகர்கள் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஆடி வெள்ளின்னு ஒரு படம். அதுல யானையைக் காட்டுவாங்க. அந்த யானை நல்ல பேமஸ் ஆகிடுச்சு. பலபேரு அந்த யானையை வச்சி படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த யானையை போட்டு அம்மன் அம்மன் கோவில் திருவிழா.

முந்தானை முடிச்சு தவக்களை: தவக்களைன்னு ஒரு நடிகர் முந்தானை முடிச்சுல வந்தாரு. சின்ன சார்ட்ஸ் போட்டு ஊர்வசி கூட சுத்திக்கிட்டு இருப்பாரு. பட்டன் கழன்றுடும். அதுக்காக ஊக்கை வச்சிக் குத்துவாங்க. அப்போ ஆன்னு கத்துவான். எல்லாரையும் சிரிக்க வச்சிட்டான். அந்தப் படத்துக்கு அப்புறம் எல்லாரும் தவக்களை தவக்களைன்னு அவரு பின்னாடி சுத்த ஆரம்பிச்சாங்க. சின்ன நடிகர்தான். ஆனா அவருக்கு பெரிய மார்க்கெட். இப்ப அவரு இல்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு அந்தக் காலகட்டத்துல டைமே இல்ல. ரொம்ப பிசி.

பவர் ஸ்டார்: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல பவர் ஸ்டார். அவர் பேரு சீனிவாசன். அவரு பவன் கல்யாணுக்குக் கொடுத்த பட்டம். அதைக் கொண்டு வந்து இங்க வச்சி பவர்ஸ்டார் சீனிவாசன்னு வச்சிட்டாரு. ஒரு நாளைக்கு 10 லட்சம் வாங்கினாரு. அவருக்குன்னு தனியா பாட்டு எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப எங்கே அந்த பவர் ஸ்டார்?

அப்பாஸ்: பால்டப்பா மாதிரி மூஞ்சி... வெள்ளையா மொழுக் மொழுக்னு இருந்தா போதுமா? உணர்ச்சி முகத்துல வர வேணாமா? முதல்ல காதல் தேசம்னு பெரிய படத்துல நடிச்சாரு. நல்லா பேரு வாங்கினாரு. அப்பாஸ் அப்பாஸ்னு அவரு பின்னாடியே தயாரிப்பாளர்கள் எல்லாம் அலைஞ்சாங்க. 23 தயாரிப்பாளர்கள் படத்துக்காக அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து புக் பண்ணினாங்க.

3 படத்துக்கு அப்புறம் அவருக்கு எதுவும் ஓடல. அப்புறம் அப்படியே மார்க்கெட் முடிஞ்சிப் போச்சு. பாத்ரூம் விளம்பரத்துல எல்லாம் நடிச்சாரு. அப்புறம் சினிமாவுல வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சதும் நியூசிலாந்துல போய் பெட்ரோல் பல்க்ல வேலை பார்க்குறதா சொல்றாங்க. அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல. இன்னைக்கு சினிமா சான்ஸ் கிடைக்காம தற்கொலை பண்ற நடிகர்கள் மத்தியில தன்னம்பிக்கையோடு இப்படி தன்னால முடிஞ்ச வேலையை செய்றது பாராட்ட வேண்டிய விஷயம்.

ஹன்சிகா மோத்வானி: அழகா இருந்தா போதுமா? ஆண்களுக்கு அழகைப் பார்க்க மாட்டாங்க. பெண்களுக்குத் தான் பார்ப்பாங்க. ஹன்சிகா மோத்வானி கூட கொஞ்சம் குண்டானதும் நடிக்கல. அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கல. கீர்த்தி சுரேஷ் கல்யாணம் ஆனதுக்குப் பிறகு சினிமாவுல நடிக்கல. திறமை இல்லன்னா யாரா இருந்தாலும் சினிமாவுல அடிபட்டுருவாங்க. திறமை இருக்கப் போய்தான் ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் எல்லாம் இருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story