அக்கட தேசத்துக்கு படையெடுக்கும் தமிழ் இயக்குனர்கள்!.. இப்படி ஒரேடியா கிளம்புனா எப்படி?..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குனர்கள் திடீரென்று தெலுங்கு சினிமா பக்கம் படையெடுத்து வருகிறார்கள். இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த மூன்று இயக்குனர்கள் தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்க இருக்கின்றார்.
இயக்குனர் அட்லீ: தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் அட்லீ தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து 3 பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த அட்லீ திடீரென்று ஹிந்தி பக்கம் சென்றார்.
அங்கு நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சல்மான்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அல்லு அர்ஜுனை வைத்து படத்தை இயக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்: தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை முடித்த பிறகு கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போகின்றார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென்று இவரும் தெலுங்கு சினிமா பக்கம் கிளம்பி இருக்கின்றார்.
அதாவது நடிகர் பிரபாஸை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏற்கனவே நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் இவர் இணைந்தால் நிச்சயம் அந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார்: இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய நெல்சன் அடுத்தடுத்த பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஜெயிலர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு தயாராகி வருகின்றார். இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் நடிகர் என்.டி.ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை அடிபட்டு வந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படி தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் படையெடுத்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். ஒருவேளை அங்கு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் பட்சத்தில் அங்கேயே டாப் நடிகர்களை வைத்து படம் இயக்க தொடங்கிவிட்டால் தமிழ் சினிமாவின் நிலைமை என்ன ஆவது என்று கூறி வருகிறார்கள்.