Categories: latest news

தெலுங்கில் சென்று பிளாப் ஆன தமிழ்ப்பட இயக்குனர்கள்… இதெல்லாம் தேவையா?

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பட உலகைப் பொருத்த வரையில் பல தமிழ்ப்பட இயக்குனர்கள் கன்னட படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்கள். அதே போல மலையாள இயக்குனர்கள் தமிழில் ஹிட் கொடுத்துள்ளார்கள். தமிழ்ப்பட இயக்குனர்கள் தெலுங்கில் சென்று படம் எடுத்து படுதோல்வியைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்பைடர்: தமிழ்ப்பட இயக்குனர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்று தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விரும்பினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்தார். அதுதான் ஸ்பைடர். அது தெலுங்கில் மட்டும் அல்லாமல் தமிழிலும் வெளியானது. இரண்டிலும் தோல்வி.

நோட்டா: தமிழில் 2 வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ஆனந்த் சங்கர். இவர் விஜயதேவரகொண்டா நடிப்பில் நோட்டா என்ற படத்தை இயக்கினார். இது அட்டர்பிளாப். இத்தனைக்கும் விஜயதேவரகொண்டாவின் அத்தனைப் படங்களும் சாதனை புரிந்தன. இதுதான் படுதோல்வி.

மைக்கேல்: தமிழில் இஸ்பட் ராஜாவும், இதயராணியும் என்ற வெற்றிப்படத்தை எழுதி இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தெலுங்கில் சந்தீப் கிஷன் நடித்த ஒரு படத்தை இயக்கினார். அதன் பெயர் மைக்கேல். அதிரடி ஆக்ஷன் படம். ஆனாலும் வசூலில் படுதோல்வி.

தி வாரியர்: தமிழில் ரன், சண்டைக்கோழி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவர் தெலுங்கில் ராம் புத்தினேனி கதாநாயகனாக நடிக்க தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். படம் படுதோல்வி. பெருத்த நஷ்டம்.

கஸ்டடி: தெலுங்கில் ஹிட் கொடுத்த நாகசைதன்யா தமிழில் ஹிட் கொடுக்க விரும்பினார். இதனால் வெங்கட்பிரபுவை அணுகினார். அவர் கஸ்டடி என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். தமிழிலும் வெளியானது. ஆனால் படம் பரபரப்பாக இருந்தாலும் படுதோல்வி.

கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க கேம் சேஞ்சர் படத்தை 4 ஆண்டுகளாக 450 கோடி செலவில் உருவானது. ஆனால் படம் அட்டர் பிளாப். இதனால் பல தெலுங்கு பட ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago