2024-ல் அதிக ரேட்டிங் வாங்கிய திரைப்படங்களின் லிஸ்ட்!.. முதலிடத்தை பிடித்த மகாராஜா!....

by சிவா |
2024-ல் அதிக ரேட்டிங் வாங்கிய திரைப்படங்களின் லிஸ்ட்!.. முதலிடத்தை பிடித்த மகாராஜா!....
X

meiyazhagan

2024 Movies: ஆங்கிலம், சீனா, ஜப்பான், கொரியன், அரபி, ஜெர்மன், பிரென்ச், இந்தோனோசியா, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் திரைப்படங்கள் தயாராகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் எல்லா மொழிகளிலும் சில நூறு திரைப்படங்கள் உருவாகிறது. இதில், எல்லா திரைப்படங்களும் பெரிய வெற்றியை பெறுவதில்லை. அதேபோல், எல்லா படங்களும் சிறந்த படங்களாக இருப்பதில்லை.

சில படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்து தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கும். அதேபோல், சில படங்கள் மட்டுமே ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு சிறந்த படங்களாக அமைந்து பேசப்படும். இப்படி ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் உருவாகும். சினிமாவில் இரண்டு வகை இருக்கிறது.

கலை சினிமா: இன்று வியாபார நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்படும் கமர்ஷியல் திரைப்படங்கள். இந்த படங்களில் வெற்றிக்கு தேவையான காதல், காமெடி, ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட் என எல்லாம் இருக்கும். மற்றொன்று கலை சினிமா. சினிமாவின் தரத்தை கொஞ்சம் மேலே உயர்த்தும் வகையில் அப்படம் உருவாக்கப்பட்டிருக்கும்.

சினிமா ரேட்டிங்: இப்போதெல்லாம் ஆன்லைனில் ஒரு பொருட்களை வாங்கினாலும் சரி, புதிய படங்களை பார்க்க திட்டமிட்டாலும் சரி.. பெரும்பலான ரசிகர்கள் ரேட்டிங் என்ன என பார்க்கிறார்கள். நல்ல ரேட்டிங் இருந்தால் மட்டுமே அந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அதன்படி 2024ம் வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படங்களை பார்ப்போம்.

மகாராஜா: letterboxd என்கிற இணைய தளம் வெளியிட்டுள்ள தகவல் படி விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் ஆக்சன்/அட்வென்ச்சர் பிரிவில் 7வது இடத்தில் இருக்கிறது. அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான லப்பர் பந்து படம் ரொமான்ஸ் ஜெனரில் 6வது இடத்திலும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 3வது இடத்திலும் இருக்கிறது.

மெய்யழகன்: அதேபோல், 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் இணைந்து நடித்த மெய்யழகன் திரைப்படம் Highest Rated Overall பட்டியலில் 13வது இடத்திலும், Drama Genre-ல் 6வது இடத்திலும், Asian Film பிரிவில் 4வது இடத்திலும் இருக்கிறது. மேலும், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் Asian Film பிரிவில் 9வது இடத்தை பிடித்திருக்கிறது.

Next Story