---Advertisement---

தியேட்டரில் இப்படித்தான் படங்களை ரெக்கார்ட் செய்வோம்!. தமிழ் ராக்கர்ஸ் சொல்லும் பகீர் தகவல்…

Published on: November 7, 2024
---Advertisement---

Tamilrockers: பல வருடங்களாகவே தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் தியேட்டரில் வெளியான அன்றே தமிழ்ராக்கர்ஸ் எனும் வெப்சைட்டில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் சைபர் கிரைமில் பலமுறை புகார் அளித்தும் போலீசாரால் தமிழ் ராக்கர்ஸ் கும்பலை கைது செய்ய முடியவில்லை.

அவர்கள் பயன்படுத்தும் இண்டர்நெட் ஐபிதான். வெளிநாடுகளில் இருந்து படங்களை பதிவேற்றுவதாலும், தொடர்ந்து ஐபி முகவரியை மாற்றிக்கொண்டே வந்ததுதால் போலீசாரால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பதிவேற்ற பின் தமிழ் ராக்கர்ஸ் கும்பலை பிடிக்க அவரும் பல முயற்சிகள் செய்தார்.

ஆனால், அவரால் முடியவில்லை. தியேட்டருக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே செல்போனில் புதிய படங்களை பார்க்க முடியும் என்பதால் பலரும் அதை விரும்பினார்கள். பைரசிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என திரையுலகினர் பலர் சொல்லியும் யாரும் கேட்கவில்லை.

இந்நிலையில்தான், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திற்காக வேலை செய்து வருபவர்கள் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது கேரள சைபர் கிரைம் போலீசார் குமரேசன், பிரவீன் குமார் என இருவரை கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் பல தகவல்களை சொல்லி இருக்கிறார்கள்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது கேரளா, கர்நாடகா, சென்னை போன்ற ஊர்களில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் தியேட்டரில் 5 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோம். அதில் நடுவில் இருக்கும் நபர் போர்வையால் தன்னை மூடிக்கொண்டு அதற்குள் கேமராவை வைத்து படத்தை பதிவு செய்து தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவிட்டு வந்தோம்’ என வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்.

போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்ராக்கர்ஸ் நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வருவது திரையுலகினருக்கு நிம்மதியை கொடுத்து வருகிறது.

Leave a Comment