ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. அதேபோல் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான படங்கள் மற்றும் புதிய வெப் சீரியஸ்களும் Amazon Prime, Netflix போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. எனவே வார இறுதி நாள் ஆனாலே சினிமா விரும்பிகளுக்கு கொண்டாட்டம்தான்.
இதில் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ஒருநாளுக்கு முன்பு அதாவது வியாழக்கிழமையே படத்தை வெளியிடுகிறார்கள். அதற்கு காரணம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்களில் வசூலை அள்ளிவிடலாம் என்கிற கணக்குதான்.
இதில் கொஞ்சம் அட்வான்ஸாக போய் தனுஷின் இட்லி கடை திரைப்படம் கடந்த 1ஆம் தேதி புதன்கிழமையே வெளியிட்டார்கள். அடுத்த நாள் அதாவது 2ம் தேதி கன்னட படமான காந்தாரா 2-வை வெளியிட்டார்கள். இதில் தனுஷின் இட்லி கடை திரைப்படம் படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. அதேநேரம் ஏற்கனவே வெளியான காந்தாரா படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்த Kantara Chapter 1 திரைப்படம் உலகமெங்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 450 கோடி வசூலை தாண்டிவிட்டது. விரைவில் படம் 500 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள்.
இந்நிலையில்தான் இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 10ம் தேதியான நாளை 10 படங்கள் ரிலீஸாகவுள்ளது. இதில் நேரடி தமிழ் படங்களாக மருதம், வில், அனல் மழை, இறுதி முயற்சி, கயிலான், நெடுமை, அக்னி பத்து ஆகிய 7 படங்கள் வெளியாகிறது. இதில் மருதம் படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். வில் படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார் மற்ற படங்களில் புதுமுக நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
அடுத்து ரஜினி நடிப்பில் 1987ம் வருடம் வெளியான மனிதன் திரைப்படம் நாளை ரீ-ரீலீஸ் ஆகவிருக்கிறது. அதேபோல் தெலுங்கில் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து உருவாகியுள்ள அகண்டா 2 திரைப்படம் தமிழில் வெளியாகவிருக்கிறது. மேலும் Trones: Ares என்கிற ஹாலிவுட் படமும் தமிழில் நாளை வெளியாகிறது. இதில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம் பாலையாவின் அகண்டா படத்தின் முதல் பாகம் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகமும் அசத்தலான வெற்றியைப் பெறும் என ரசிகர்களால் கணிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நாம் எதேச்சையாக…
ஹெச்.வினோத் இயக்கத்தில்…
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…