Actor vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். துவக்கத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டார். இயக்குனர் விக்ரம் விஜய் மீது வைத்த நம்பிக்கையால் பூவே உனக்காக பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றி விஜயின் கேரியரை மாற்றியது.
மற்ற இயக்குனர்களும் விஜயை வைத்து படமெடுக்க முன்வந்தனர். காதல் மற்றும் ஆக்சன் கதைகளில் தொடந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை விஜய் உருவாக்கினார். குறிப்பாக விஜயின் நடனமாடும் ஸ்டைல் அவருக்கு பெண் ரசிகைகளை கொண்டு வந்தது.
கில்லி படத்தின் மெகா வெற்றி விஜயை வசூல் மன்னனாக மாற்றியது. விஜயின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்க துவங்கினார். துப்பாக்கி, மெர்சல், தெறி, கத்தி,மாஸ்டர் என பல ஹிட் படங்களை கொடுத்தார். லியோ, கோட் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது.
ஒருபக்கம், விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியின் தலைவராகியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சியினர் போட்டியிடுவார்கள் என அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்தார். இப்போது, மாநாடு நடத்தும் பணிகள் துவங்கியுள்ளது.
வருகிற 27ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடக்கவிருப்பதால் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காமராஜர், பெரியார், அம்பேத்கார் வரிசையில் விஜய்க்கும் பெரிய பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் விஜய் 2 மணி நேரம் பேசுவார் என சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் நடிகர் தாடி பாலாஜி ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லோர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 2026 தேர்தலில் மக்கள் கையில் உள்ள புள்ளி மற்ற எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளிதான்’ என சொல்லி இருக்கிறார்.
Kanguva: தமிழ்…
Kanguva: சூர்யா நடிப்பில்…
Kanguva: சூர்யா…
Kanguva: கங்குவா…
சிறுத்தை சிவாவின்…