தளபதி 69ல் ஏஐ மூலமா அந்த மாஸ் வில்லன்..?. அப்படின்னா படம் தெறிக்க விடுமே..!

விஜய் நடிக்க உள்ள கடைசி படம் தளபதி 69 என தற்காலிகமாக தலைப்பு இடப்பட்டு சூட்டிங் நடந்துகொண்டுள்ளது. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் வில்லனாக ஏஐ மூலம் ரகுவரன் நடிக்க உள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது. இப்போது மீண்டும் விஜய் உடன் ரகுவரன் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதற்கு அவரது மனைவியும், நடிகையுமான ரோகிணி என்ன விளக்கம் கொடுக்கிறார்னு பார்க்கலாம்.
கஷ்டமான பர்பார்மன்ஸ்: கண்ணுக்குள் நிலவு படத்தை பலரும் சரியாக கவனிக்கல. ரகுவரன் சாரோட பலத்தை நல்லா புரிஞ்சிக்கிட்டு இயக்குனர் பாசில் படத்தை எடுத்துருப்பாரு. அவரு பார்க்குற பார்வையைப் பார்க்கும்போது இவங்க தான் வில்லனோன்னு ஒரு கட்டத்துல நினைக்கத் தோணும்.
ஆனா திரும்பிப் பார்க்கும்போது இவர் நல்லவர்னு தெரியும். இவர் ரொம்ப வெகுளித்தனமாகத் தான் பார்த்திருப்பாருன்னு நினைக்கத் தோன்றும். அவரு பர்பார்மன்ஸ்லயே கஷ்டமான இடத்தைத் தொட்டுருந்தாரு. அது யாருமே பண்ணாத ஒரு பர்பார்மன்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணைவாரா?: தளபதி 69ல ரகுவரன் சார் இருக்காரான்னு ஆங்கர் கேட்டதற்கு ரோகிணி இல்லையே. நான் கேள்விப்படவே இல்லையேன்னு சொன்னாங்க. கேட்டா என்னைத் தான் கேட்கணும். என்னை இல்ல ரிஷியைக் கேட்கணும். அப்படி இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பாங்க.
ஆனா அப்படி இல்ல. அதை வந்து சரியா பண்ணக்கூடியவங்க தான் பண்ணனும். ரகு சார் வந்து புரொடக்டிவ் ஆக்டரா இருந்தாரு. தன்னோட பர்பார்மன்ஸ் கரெக்டா வரலன்னா அவரால அதை பெரிசா எடுத்துக்கவே மாட்டார்.
சாப்பிட மாட்டாரு: அந்த பர்பார்மன்ஸ் கரெக்டா வரணும்கறதுக்காக இப்ப காலைல 9 மணிக்கு ஒரு சீன் எடுக்குறாங்க. அது நைட் 9 மணி வரைக்கும் வரலன்னா சாப்பிட மாட்டாரு. அந்த அளவுக்கு டெடிகேஷன் இருக்கும். சாப்பிட்டு நடிங்கன்னு சொல்வாரு. சாப்பிட்டா மண்ணு தின்ன பாம்பு மாதிரி ஆகிடுவேன்.
தளபதி 69: அதனால என் பர்பார்மன்ஸ் மாறும். அதனால டீ குடிச்சிட்டு இருந்துக்குவாரு. அவர் மாதிரி ஒருத்தர் பண்றாருன்னா நல்லா அவரே மாதிரி பண்ணனும். ரகு சார் பார்த்தாங்கன்னா 'வாவ்'னு சொல்ல வைக்கணும். ஐயோ ஏன் என்னை இப்படி பண்ணிட்டீங்கன்னு சொல்ற மாதிரி வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.