Categories: latest news

தளபதி 69 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல இத கவனிச்சீங்களா?.. அப்போ அந்த விஷயம் கன்ஃபார்ம் போலயே!..

Thalapathy 69: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் தளபதி 69 படத்தின் பேச்சு தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் ஹார்ட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகர் விஜய் எச் வினோத் இயக்கத்தில் தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கின்றது. படத்தில் பிஸியாக இருந்தாலும் தனது அரசியல் வேலைகளில் நடிகர் விஜய் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில தினங்களாக நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்திற்கு நாளைய தீர்ப்பு என்கின்ற டைட்டிலை வைக்க இருப்பதாக கூறி வந்தார்கள்.

இந்த டைட்டில் விஜயின் முதல் படத்தின் தலைப்பு ஆகும். இந்நிலையில் இன்று 11 மணிக்கு தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. அதன்படி படத்திற்கு ஜனநாயகன் என்கின்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும் போது நிச்சயம் இப்படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸ் தேதியை போடவில்லையே என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். படம் குறித்த அனௌன்ஸ்மென்ட் வெளியான சமயத்தில் படம் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அது போன்ற எந்த ஒரு தேதியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் நிச்சயம் இப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்ற செய்தி உறுதியாகி இருக்கின்றது. அதனை வைத்துப் பார்க்கும்போது சமூக விமர்சகர்கள் கூறியபடி 2025 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் எந்த திரைப்படமும் ரிலீஸ் ஆகாது என்று தெரிகின்றது. இது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இருப்பினும் இன்று மாலை 4 மணிக்கு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் அதில் ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago