Categories: latest news

Thalapathy69: சூடுபிடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்! பூஜை தான் போட்டாங்க.. அதுக்குள்ள இத்தனை கோடியா?

கடந்த ஒரு மாதமாக அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்து வந்த விஜய் இன்றிலிருந்து அவருடைய கடைசி படமான தளபதி 69ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பூஜை எல்லாம் போடப்பட்டு ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவருடைய மாநாடு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார் விஜய்.

நேற்று அவருடைய முதல் செயற்கழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தளபதி 69 ஆவது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் விஜய். பொதுவாக எந்த ஒரு படமானாலும் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் அதனுடைய வியாபாரம் ஆரம்பிக்கும்.

ஆனால் தளபதி 69 ஆவது படத்தை பொருத்தவரைக்கும் இப்போதிலிருந்து அதனுடைய ஓவர்சீஸ் வியாபாரம் சூடு பிடித்து இருக்கிறது. துபாயை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல நிறுவனம் தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் ரைட்சை 75 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுவும் ஒரே பேமெண்டில் அந்த பணத்தை தளபதி 69 படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஓவர்சீஸ் வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வைத்து தான் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பையே நடத்தப் போவதாகவும் இன்னொரு பக்கம் செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது.

தளபதி 69 படத்தை கே வி என் ப்ரொடக்சன் தான் தயாரிக்கிறது. பல படங்களுக்கு இந்த தயாரிப்பு நிறுவனம்தான் பைனான்சும் செய்து வருகிறதாம். அப்படி இருக்க இவர்களிடம் எப்படி பணம் இல்லாமல் இருக்கும் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது.

ஏற்கனவே மதுரை அன்புச் செழியனிடம் கே வி என் நிறுவனம் பைனான்ஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அன்புச் செழியன் பணம் கொடுக்க மறுத்ததால் தளபதி 69 படத்தின் ஓவர் சீஸ் வியாபாரம் மூலம் வந்த அந்த பணத்தை வைத்து தான் இந்தப் படத்தை ஆரம்பிக்க போவதாக சொல்லப்படுகிறது.

படத்திற்கான மீதமுள்ள செலவுக்கான பணத்தையும் வேறொரு நிறுவனத்திடம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டு நடத்தப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

8 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

15 hours ago