Categories: Cinema News

போதும் போதும் மாநாட்டு பேச்சை முடிங்க… அண்ணன் மீண்டும் சினிமாவுக்கு போறேன்… அடி ஆத்தி!..

Thalapathy: தளபதி மாநில மாநாடு முடிந்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய அடுத்தக்கட்ட சினிமா நகர்வு குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் கடைசி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை முடித்த கையோடு தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுப்பட இருக்கிறார். இதனால் தளபதி69 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தினை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் பூஜை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது.

அதை தொடர்ந்து முதல்கட்ட ஷூட்டிங் நடந்தது. டான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தாகவும் தகவல்கள் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பு செய்ய இருப்பதால் பாடலில் அதிக டிரெண்ட்டாக விஜயிற்கு அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் பரபரப்பாக நடத்தப்பட்டது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. 45 நிமிடங்கள் விஜய் ஆவேசமாக பேசியது பலருக்கும் ஆச்சரியத்தினை உருவாக்கியது.

இந்த மாநாட்டின் பேச்சை இயக்குனர் ஹெச்.வினோத் எழுதி கொடுத்ததாக கூறப்பட்டது. விஜய் எல்லா பேச்சுகளுமே வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் தளபதி69 படப்பிடிப்பின் இரண்டாம் கட்டம் விரைவில் அடுத்த மாத துவக்கத்தில் தொடங்க இருக்கிறதாம். படத்தின் ஷூட்டிங்கை வரும் ஏப்ரலுக்குள் முடிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Published by
ராம் சுதன்