Cinema News
தண்டேல் படத்திடம் சரண்டரான விடாமுயற்சி!.. அஜித்தையே ஓரங்கட்டிட்டாரே சாய் பல்லவி..!
Actor ajith: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவரின் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடுவார்கள். கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாததால் மிகுந்த சோகத்தில் இருந்தார்கள் அவரின் ரசிகர்கள். இதனை தொடர்ந்து நீண்ட நாள் காத்திருப்பதற்கு பலனாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
விடாமுயற்சி திரைப்படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்திருந்து அலுத்து போய் விட்டார்கள்.

அதனை தொடர்ந்து வெற்றிகரமாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. படம் வெளியான நாள் அஜித் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த நாளில் படத்தை குறித்து நெகட்டிவ்வாக பேசி வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலையும் பாதித்திருக்கின்றது.
விடாமுயற்சி வசூல் : அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூலையும், 2-வது நாள் 10.25 கோடி வசூலையும், 3-வது நாளான நேற்று 12 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. மொத்தம் 3 நாளில் 47.75 கோடி வசூலையும் பெற்றிருக்கின்றது. படம் வெளியாகி மூன்று நாளான நிலையில் இன்னும் 50 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு வெளியான தண்டேல் திரைப்படம் நல்ல வசூலை செய்திருக்கின்றது.
தண்டேல் திரைப்படம்: இயக்குனர் சந்து முண்டேட்டி இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தண்டேல். இந்த திரைப்படத்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வெளியானது. தமிழில் விடாமுயற்சிக்கு போட்டியாக வெளியான ஒரே திரைப்படம் தண்டேல் தான். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தண்டேல் வசூல்: நாகசைதன்யா மீனவராக நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை வைத்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் 11.5 கோடி வசூல் செய்தது. உலக அளவில் மொத்தம் 21.27 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று இந்த திரைப்படம் ரூ.12.64 கோடி வசூல் செய்திருக்கின்றது.

இந்த வசூலானது விடாமுயற்சி திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூலை விட அதிகம். விடாமுயற்சி திரைப்படம் இரண்டாவது நாளில் வெறும் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் தண்டேல் திரைப்படம் அதனை முறியடித்து இருக்கின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நாக சைதன்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.