Categories: latest news

விஜயின் நிறைவேறாத ஆசை என்னன்னு தெரியுமா? பிரபல நடிகர் சொல்றதைக் கேளுங்க…

நடிகர் விஜய் தற்போது அரசியல், சினிமா என இரு விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அரசியல் மாநாட்டை அனைவரும் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அசத்தி விட்டார். தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.

இப்போது மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் போல வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார். நேற்று தீபாவளிக்கு வாழ்த்து சொன்னார். இன்று தமிழ்நாடு தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

விஜயின் படங்கள் எல்லாவற்றிலும் ஒரு சென்டிமென்ட், ஒரு குத்துப்பாட்டு, காமெடி, பைட்னு எல்லாவற்றையும் கரெக்டான விகிதங்களில் கலந்து சூப்பரான மசாலாவாகக் கொடுத்திருப்பார்கள்.

அந்த வகையில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஏராளமான ரசிகர்கள் ரசித்துப் பார்த்தது விஜயின் படங்களைத் தான் என்று சொல்லலாம். கலெக்ஷனையும் குவிக்கிறது. ரஜினிக்கு இணையாக அதிக சம்பளத்தையும் வாங்கியுள்ளார்.

கடைசியாக தனது படத்துக்கு 200 கோடி வரை சம்பளம் பெற்ற இவர் அனைத்தையும் விட்டு விட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுகிறேன் என்று முன்வந்தது பாராட்டுக்குரிய விஷயம்தான்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமாக தளபதி 69ல் நடித்து வருகிறார். அந்தவகையில் விஜய் அடுத்து அரசியலில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார் என்பதை அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிரபல நடிகர் சதீஷ் விஜய் குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அது இதுதான்…

விஜய் சார்கிட்ட ஒரு தடவை நான் கேட்டேன். ‘ரஜினி சார் படத்துல எந்தப் படத்தை ரீமேக் பண்ணுவீங்க?’ன்னு. அதுக்கு அவர் பாட்ஷாவைத் தான் சொல்லப் போறாருன்னு நினைச்சேன். ஆனா அவர் ‘அண்ணாமலை’ன்னு சொல்லிட்டாரு. ஏன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்ன பதில் இதுதான். ‘ஒரு தங்கச்சி, அம்மா, ஒரு சாதாரண மனுஷன் எப்படி ஜெயிக்கிறான்னு இருக்கும். அதனால எனக்கு அது சூட் ஆகும்னு நினைக்கிறேன்’னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

6 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

7 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago