Categories: latest news

சிவாஜியைக் குதிரை மூஞ்சின்னு கேலி செய்த இயக்குனர்… அவர்மீது காண்டான இசை அமைப்பாளர்

நடிகர் சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களையும், எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற பிரமாண்ட படத்தையும் தயாரித்து இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. அவர் தயாரித்த முதல் படம்னா அது கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. அந்தப் படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். இவர் பி.ஆர்.பந்துலுவின் நண்பர்தான்.

குதிரை மூஞ்சி: பராசக்தி படத்தில் சிவாஜி நடித்த 2000 அடி காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்தக் குதிரை மூஞ்சி நடிகர் தமிழ்சினிமாவுக்கு ஒத்து வருவாரா என்று கிண்டல் செய்தவர்தான் ப.நீலகண்டன். அப்படிப்பட்ட ப.நீலகண்டனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர் சிவாஜி. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்துக்கு இசை அமைத்தவர் டி.ஜி.லிங்கப்பா.

அவர் மிகப்பெரிய ஞானஸ்தர். அவரைப் பொருத்தவரைக்கும் அவர் டியூன் போட்ட உடனே பி.ஆர்.பந்துலுவுக்கு வாசித்துக் காட்டுவார். அவர் ‘டியூன் எல்லாம் அற்புதமா இருக்கு’ன்னு பாராட்டுவார்.

பனிப்போர்: ‘எங்கிட்ட போட்டுக் காட்டாதீங்க. எல்லாமே அவருக்கிட்ட போட்டுக் காட்டுங்க. அவர்தான் படத்தோட டைரக்டர்’னு சொல்லி விட்டார். ப.நீலகண்டனுக்கும், லிங்கப்பாவுக்கும் ஏற்கனவே பனிப்போர் உண்டு. இவர் டியூன் போட்டுக் காட்டுன உடனே ஆபீஸ் பாய், மேனேஜர், காபி கொண்டு வர்ற பையன், கார் டிரைவர்னு எல்லாருக்கும் அதைப் போட்டுக் காட்டுவார்.

ப.நீலகண்டன் Vs லிங்கப்பா: அது அவர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ‘ஓகே’ பண்ணுவார். இந்தப் போக்கு லிங்கப்பாவுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது. ஏன்னா அவர் மிகப்பெரிய ஞானஸ்தன். தன்னுடைய பாட்டை எடை போட இவங்களை எல்லாம் கூப்பிடுறாரேன்னு ஒரு வருத்தம் இருந்தது. ஆனா இதை எல்லாம் மீறி அவருடன் இணைந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் லிங்கப்பா. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி: 1954ல் சிவாஜி நடித்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு தயாரிக்க ப.நீலகண்டன் இயக்கினார். படத்திற்கு இசை அமைத்தவர் டிஜி.லிங்கப்பா என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் காலத்தில் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

sankaran v

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago