Categories: latest news

வாங்குன ஜாமீன் வீணாப்போச்சே!.. ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?!….

Johny master: சினிமாத்துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் என்பது பல வருடங்களாக இருக்கிறது. சினிமா வாய்ப்புக்காக வரும் பெண்களிடம் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என் கேட்டு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.

சிலர் அதை ஏற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்க துவங்கிவிடுவார்கள். பலரும் சினிமாவே வேண்டாம் என சென்று விடுகிறார்கள். திரைத்துறையில் சந்திக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக பெண்கள் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம் வெளியே சொல்லி சர்ச்சையானால் சினிமாவில் யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்கிற பயம்தான்.

பாடகி சின்மயி கூட சில வருடங்களுக்கு முன்பு சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பேசினார். அவரைத் தொடர்ந்து பல பெண்களும் சமூகவலைத்தளங்களில் பேசினார்கள். அதன்பின் சின்மயிக்கு பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டப்பிங் பணியும் அவருக்கு யாரும் கொடுப்பதில்லை.

இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கிற்து. இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து குறுகிய காலத்தில் பிரபலமான ஜானி மாஸ்டரும் பாலியல் புகாரில் சிக்கினார். சில நாட்களுக்கு முன்பு நடன கலைஞரான ஒரு பெண் ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருபக்கம், தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது விழா வருகிற 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, அதில் கலந்து கொள்வதாக சொல்லி ஜாமின் வாங்கினார் ஜானி.

ஆனால், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது இப்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியதால் அவருக்கு விருது வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் ஜானி மாஸ்ட்ர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago