Categories: Cinema News latest news

கமலை மன்னிப்பு கேட்கச் சொல்றது எந்த விதத்துல நியாயம்? பொங்கி எழும் தயாரிப்பாளர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிக்கும் தக் லைஃப் வரும் ஜூன் 5ல் ரிலீஸ் ஆகிறது. தக் லைஃப் பட ஆடியோ லான்ச் விழாவுல கன்னட மொழி குறித்து கமல் பேசியது சர்ச்சையாக வெடித்தது. கமல் மன்னிப்பு கேட்கணும்னு சொன்னாங்க. கமல் எவ்ளோ பெரிய லெஜண்ட். அவரை பார்த்து மற்ற மொழி நடிகர்கள் எல்லாரும் கொண்டாடுறாங்க. சிவராஜ்குமார் அவரைக் கட்டிப் பிடிச்சதுக்காக 3 நாளா அந்த ஸ்மெல் போயிடக்கூடாதுன்னு குளிக்காமலேயே இருந்தாராம்.

அந்த வகையில் கமல் பேசியது சர்ச்சையானதுக்குக் காரணம் தவறான புரிதல் தான். கமல் தமிழ் மொழி மூத்த மொழி என்கிற பார்வையில் தான் பேசி இருக்கிறார். இதை அவர்கள் மென்மையாக எடுத்துக் கூறி இருக்கலாம். இது எங்களது உணர்வுகளைப் பாதிக்கிற விஷயம். இனி இப்படி பேசாதீங்கன்னு சொல்லி இருந்தால் கமல் அலார்ட்டா ஆகி இருப்பாரு. அதை விட்டுவிட்டு கமல் மன்னிப்பு கேட்கணும். உங்க படத்தை ஓட விட மாட்டோம்னு சொன்னா அது எந்த விதத்துல நியாயம் என கேட்கிறார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்.

சிவராஜ்குமாரே ஒரு விஷயம் சொல்லி இருந்தார். ‘நீங்க இவ்வளவு பேசுறீங்களே… கன்னட மொழிக்காக என்ன பண்ணினீங்க’ன்னு? கேட்கிறார். அதுக்கு பதில் சொல்லுங்க. அதனால தக் லைஃப் கன்னட ரிலீஸைப் பாதிக்குமான்னு கேள்வி எழுகிறது. எனக்குத் தெரிஞ்சி இதெல்லாம் சரியாகி விடும்னு நினைக்கிறேன். கடந்த 5 மாதங்கள்ல கன்னட சினிமா உலகில் ஒரு வெற்றிப்படம் கூட வரவில்லை.

இந்தப் பிரச்சனையைப் பெரிய அளவில் கொண்டு போகாம அதை ஒரு கோரிக்கையாக வைத்துக் கொண்டு கடந்து போயிடலாம் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரு பான் இண்டியா படம் 1000 கோடி வசூல் பண்ணனும்னா வட இந்தியாவில் மட்டும் 40 சதவீதம் வசூல் பண்ண வேண்டும். கேஜிஎப் 2, புஷ்பா 2 படங்களைச் சொல்லலாம். 1000 கோடி தக் லைஃப் கலெக்ட் பண்ணனும்னா 350ல இருந்து 400 கோடி கலெக்ட் பண்ணனும் என்கிறார் தனஞ்செயன்.

Published by
sankaran v