Categories: Cinema News latest news

உன்கூட படம் பண்ண மாட்டேன்!.. விஜய்சேதுபதி – பாண்டிராஜ் இடையே நடந்த செம சண்டை..

ஒரு திரைப்படம் தொடர்பாக பேசும்போதோ, திரைப்படம் உருவாகும்போதோ இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையே சண்டை, கருத்து வேறுபாடு வருவது சினிமாவில் சகஜம். ஒரு திரைப்படம் முழுமை பெற இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையே உள்ள உறவு மிகவும் முக்கியம்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி ஜுலை 25ம் தேதி வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. வெளியான 10 நாட்களில் இப்படம் 75 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி ‘எனக்கு பாண்டிராஜை 4 வருடங்களாக தெரியும். ஒரு சந்திப்பில் எங்களுக்குள் சண்டை வந்து இவர்கூட படமே பண்ணக்கூடாது என முடிவு செய்தேன். ஆனால் அது இப்போது சரியாகிவிட்டது’ என பேசியிருந்தார்.

தற்போது இருவருக்கும் இடையே நடந்த சண்டை பற்றிய முழுவிவரம் தெரிய வந்ததுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியிடம் பாண்டிராஜ் கதை சொன்ன போது கதை நன்றாக இல்லை என சொல்லி விஜய் சேதுபதி நடந்து கொண்டது பாண்டிராஜை கோபப்படுத்தியது. ‘உங்கள வச்சிலாம் நான் படம் எடுக்கமாட்டேன்’ என அவர் கோபமாக சொல்ல இதனால் கோபமடைந்த விஜய் சேதுபதி ‘நானும் உங்க கூட படம் பண்ண மாட்டேன்’ என சொல்லிவிட்டார்.

ஆனால் சில வருடங்கள் கழித்து ஒரு விழாவில் பாண்டிராஜை சந்தித்த விஜய் சேதுபதி அவரை கட்டியணைத்து ‘சார் உங்கள பத்தி என்கிட்ட தப்பா சொல்லிட்டாங்க. நடந்ததை மனசில வச்சிக்காதீங்க’ என சொல்ல பாண்டிராஜும் ‘நான் பேசினதை நீங்களும் மறந்துடுங்க’ என சொல்ல சுமூக உறவு ஏற்பட்டு தலைவன் தலைவி படம் உருவாகியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு முன்பு இன்னொரு பிளாஷ்பேக்கும் உண்டு. பாண்டிராஜ் தனது முதல் படமான பசங்க படத்தை இயக்கியபோது அந்த படத்தில் வாய்ப்பு கேட்டுப்போனவர் விஜய் சேதுபதி. ஆனால் அவரை பாண்டிராஜ் ரிஜெக்ட் செய்தார். அப்போது விமலை தொடர்புகொண்டு உனக்கு இந்த கதை செட் ஆகும் என சொல்லி அவரை பாண்டிராஜிடம் அனுப்பியதே விஜய் சேதுபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா