‘மின்சாரக்கண்ணா’ படம் தோல்விக்கு ஹீரோயின்தான் காரணமா? கே.எஸ்.ரவிக்குமார் ஓப்பனா சொல்லிட்டாரே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:12  )

தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். இன்று அவருடைய 69வது படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தான் அவருடைய கடைசி படமாகவும் இருக்கும். அதன் பிறகு ஒரு முழு நேர அரசியல்வாதியாக விஜய் இருப்பார்.

சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறி இருக்கிறார். விஜய் நடித்த ஒரு படத்தின் தோல்விக்கு ஹீரோயின் தான் காரணமா என்ற ஒரு விமர்சனம் வெகு நாட்களாக இருந்து வருகிறது. அதற்கான சரியான காரணத்தை கூறியிருக்கிறார் படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக மின்சார கண்ணா திரைப்படம் அமைந்தது. அந்த படத்தில் அமைந்த காமெடியும் ரசிக்கும்படியாக இருந்தது. எல்லா விதமான அம்சங்களும் இருந்திருந்தும் அந்தப் படம் சரியாக போகவில்லை.

காரணம் ஹீரோயின்தான் என அந்த நேரம் பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் கே எஸ் ரவிக்குமார் அதற்கான உண்மையான காரணத்தை கூறி இருக்கிறார். அந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக அப்போது டாப் நடிகையாக இருந்த ரம்பாவும் நடித்திருப்பார். விஜய்க்கு ஜோடியாக மும்பையில் இருந்து ஒரு புதுமுக நடிகையை தயாரிப்பு தரப்பிலிருந்து வரவழைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் நானும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததனால் இந்த நடிகை தேர்வு விஷயத்தில் தலையிடவில்லை. சரி அவர்களே நடிகையை தேர்ந்தெடுக்கட்டும் என விட்டுவிட்டேன். ஆனால் படத்தில் டாப் நடிகையாக இருக்கும் ரம்பாவை விட்டு அந்த நடிகையின் பின் விஜய் போகிறாரே என்ற ஒரு விமர்சனம் இருந்தது. இதுதான் படத்திற்கான தோல்விக்கு காரணம். மற்றபடி அந்த ஹீரோயின் தான் காரணம் என சொல்ல முடியாது என கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story