மிஷ்கினை வெளுத்து வாங்கிய புரொடியூசர்.. அந்த மன்னிப்புக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?..

by ramya suresh |
மிஷ்கினை வெளுத்து வாங்கிய புரொடியூசர்.. அந்த மன்னிப்புக்கு பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?..
X

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை இயக்கி ஒரு சிறந்த இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்கும். தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வருகின்றார்.

இவரிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே பொது இடங்களில் தேவையில்லாமல் வார்த்தையை விட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் கடைசியாக பாட்டில் ராதா என்கின்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் மேடை நாகரிகம் இல்லாமல் பேசி அனைவரிடமும் திட்டு வாங்கினார். இவரின் பேச்சுக்கு தொடர்ந்து சினிமாவில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.

எப்படி இவர் இப்படி எல்லாம் பேசலாம். மேலும் அங்கிருந்தவர்கள் யாருமே இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் பேசியதை ரசித்துப் பார்த்தார்கள் என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்ததாக 2 கே லவ் ஸ்டோரி என்கின்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் தானாக கலந்து கொண்ட மிஷ்கின் மேடையில் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

தான் வேண்டுமென்றே பேசவில்லை, ஒரு புளோவில் வந்துவிட்டது. நான் பேசியது தவறுதான், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த பலரும் என்ன மிஷ்கின் இப்படி சரண்டராகிவிட்டார் என்றெல்லாம் கூறி வந்தார்கள். ஆனால் அதற்கு பின்னால் மிகப்பெரிய காரணமே இருந்திருக்கின்றது. அதாவது மிஷ்கின் தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரித்திருக்கின்றார். இயக்குனர் மிஷ்கின் இப்படி பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தயாரிப்பாளர் தானும் மிஷ்கினை தாறுமாறாக திட்டி இருக்கின்றார். எதற்கு இப்படி எல்லாம் பேசுகிறீர்கள், அடுத்ததாக நம்ம படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இதெல்லாம் தேவையா? என்று திட்டி இருக்கின்றார்.

இதனால் தான் மிஷ்கின் இப்படி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். மேலும் விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிரெயின் திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட இருக்கிறார்கள். இந்த சமயத்தில் மிஷ்கின் சர்ச்சையாக பேசினால் அது ப்ரோமோஷனுக்கு மிகப்பெரிய பிரச்சினையை கொடுக்கும் என்பதால் தயாரிப்பாளர் தாணு திட்டியதற்காக மிஷ்கின் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார் என்று சினிமா விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Next Story