‘மங்காத்தா’ டீமே இருக்கும் போது அது நடக்காம இருக்குமா? வெங்கட் பிரபு - அஜித் சந்திப்பின் பின்னனி

by ராம் சுதன் |

சமீபத்தில் ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவி பெரும் வைரலானது. ஏற்கனவே இந்த கூட்டணி மறுபடியும் சேராதா என்ற ஒரு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்க திடீரென இவர்கள் சந்தித்துக் கொண்டதன் புகைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஹைப்பையே ஏற்படுத்தி இருக்கிறது.

அதுதான் வெங்கட் பிரபு அஜித் சந்தித்துக் கொண்ட புகைப்படம். அஜார்வைஜானில் விடாமுயற்சி படத்தில் பிஸியாக இருக்கும் அஜித்தை வெங்கட் பிரபு சந்தித்தது திரையுலக மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. ஒரு வேளை கோட் படத்தில் அஜித் இருப்பாரோ என்ற ஒரு கேள்வி ஒரு பக்கமும், மங்காத்தா 2 படத்திற்காக இருக்குமோ என்ற ஒரு கேள்வி இன்னொரு பக்கமும் எழுந்து வந்தன .

இதைப் பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான வி கே சுந்தர். கோட் படத்தில் கண்டிப்பாக அஜித் இல்லை என உறுதியாக கூறிவிட்டார் சுந்தர். இது மட்டுமல்லாமல் கோட் படத்திற்காக விஎஃப்எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தான் நடைபெற்று வருகிறது.

அதுவும் மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான விஎஃப்எக்ஸ் பணிகள் தான் அமெரிக்காவில் நடந்து வருகிறதாம். அதற்காகத்தான் வெங்கட் பிரபு அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். வரும் வழியில் துபாய் வந்து தான் வரவேண்டும். ஏற்கனவே அஜர்பைஜானில் தான் அஜித் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட வெங்கட் பிரபு சுரேஷ் சந்திராவிடம் தொடர்பு கொண்டு அஜித்தை பார்க்க வேண்டும் என கூறினாராம் .

இது அஜித்தின் காதுக்கு செல்ல உடனே ஓகே சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தான் அஜர்பைஜானில் இருக்கும் அஜித்தை வெங்கட் பிரபு போய் சந்தித்திருக்கிறார். ஏற்கனவே மங்காத்தா 2 படத்தின் மொத்த கதையையும் வெங்கட் பிரபு எழுதி விட்டாராம். அது எப்பொழுது நடக்குமோ அந்த சமயம் நடக்கட்டும் என்றுதான் வெங்கட்பிரபு காத்திருக்கிறாராம்.

இப்பொழுது அஜித்தை சந்தித்து ஒரு புது படத்தின் கதையை சொல்லி இருக்கிறாராம் வெங்கட் பிரபு. அதுமட்டுமல்லாமல் சென்னையில் வந்து சந்தித்தால் அஜித்தை மட்டும் தான் அவர் பார்த்திருக்க முடியும். ஆனால் அஜர்பைஜானுக்கு சென்றதனால் ஒட்டுமொத்த மங்காத்தா டீமே அங்கு தான் இருக்கிறார்கள்.

அஜித்துடன் த்ரிஷா அர்ஜுன் என குரூப்பே அங்குதான் இருக்கிறார்கள்.அதனால் இது ஒரு மங்காத்தா ரியூனியன் போலவே மாறி இருக்கிறது.

Next Story